POCO X3 இன்று அசத்தலான ஆபருடன் விற்பனைக்கு வருகிறது.

Updated on 05-Oct-2020
HIGHLIGHTS

Poco X3 இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனில் முதல் கலத்தில் ICICI வங்கியின் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்

Poco X3 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது

போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில்  Poco X3 ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்து உள்ளது.அதனை தொடர்ந்து இன்று பகல் 12 மணிக்கு  பிளிப்கார்டில்  விற்பனைக்கு  வருகிறது.

விலை மற்றும் விற்பனை தகவல்

போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் ஷேடோ கிரே மற்றும் கோபால்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும், 6 ஜிபி +128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18,499 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

இந்த போனில் முதல் கலத்தில் ICICI வங்கியின் கிரெடிட் கார்ட் மூலம்  வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில், பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டுடன் இந்த போனை வாங்கினால், உங்களுக்கு 5 சதவீத கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் இதனுடன் நோ கோஸ்ட் EMI ஒப்சனும் வழங்கப்படுகிறது.

POCO X3  சிறப்பம்சங்கள்

– 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 எல்சிடி ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 ஜிபியு
– 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 
– டூயல் சிம்
– 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.89
– 13 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
– 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5எம்எம் ஆடியோ ஜாக்
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

 புதிய போக்கோ எக்ஸ்3 மாடலில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் பிளஸ் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :