Poco M2 Pro, 5 கேமராவுடன் ரூ,13,999 ஆரம்ப விலையில் அறிமுகம்.

Poco M2 Pro, 5 கேமராவுடன் ரூ,13,999 ஆரம்ப விலையில்  அறிமுகம்.
HIGHLIGHTS

Poco இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் போகோ எம் 2 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் போனில் கிடைக்கிறது.

இந்தியாவில் போக்கோ எம்2 ப்ரோ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13999 என்றும், 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

ஸ்மார்ட்போன் பிராண்ட் போக்கோ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் போகோ எம் 2 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்ப விலை 14 ஆயிரத்துக்கும் குறைவாக, இந்த போனில் நான்கு பின்புற கேமராக்கள் மற்றும் பஞ்ச்-ஹோல் கேமரா கொண்ட டிஸ்பிளே உள்ளது. இது தவிர, 5000 எம்ஏஎச் பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் போனில் கிடைக்கிறது. சியோமியிலிருந்து பிரிந்து ஒரு செல்ப் பிராண்டாக மாறிய போகோ, இந்தியாவின் மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆகும்.

விலை விற்பனை தகவல்.

புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அவுட் ஆஃப் புளூ, கிரீன் அண்ட் கிரீனர் மற்றும் டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் போக்கோ எம்2 ப்ரோ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13999 என்றும், 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 14 ஆம் தேதி துவங்குகிறது. 

Poco M2 Pro,  சிறப்பம்சங்கள்

– 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
– 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 5 எம்பி 2cm மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
– ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i coating)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப்-சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ 1080×2400 பிக்சல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo