POCO M2 PRO விரைவில் அறிமுகம் செய்யப்படும், ஒரு சில அம்சம் லீக்.

HIGHLIGHTS

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் M2003J6CI

போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

POCO M2 PRO விரைவில் அறிமுகம் செய்யப்படும், ஒரு சில  அம்சம் லீக்.

POCO விரைவில் தனது புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். போகோ ஏற்கனவே போகோ எஃப் 2 ப்ரோவை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் இந்த பிராண்ட் இந்திய சந்தைக்கு வேறு தொலைபேசியைத் தயாரிக்கிறது. இந்த போன் போகோ எம் 2 ப்ரோ என்று பெயரிடப்படும் மற்றும் போன் புளூடூத் எஸ்ஐஜி மற்றும் வைஃபை அலையன்ஸ் தரவுத்தளத்தில் காணப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 புதிய POCO  ஸ்மார்ட்போன் போக்கோ எம்2 ப்ரோ பெயரில் அறிமுகமாகும் என்றும் இது கிராம் எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. போக்கோ பிராண்டின் போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், மற்றொரு போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

மேலும் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் M2003J6CI எனும் மாடல் நம்பரில் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி மற்றும் வைபை அலையன்ஸ் வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது. அதன்படி போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் MIUI 11 யுசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

வைபை அலையன்ஸ் வலைதள விவரங்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இன்டர்பேஸ் கொண்டிருக்கும் என்றும் டூயல் பேண்ட் வைபை கனெக்டிவிட்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதன் விவரங்கள் ரெட்மி நோட் 9 மாடல்களுடன் ஒற்றுபோகிறது. அதன்படி சியோமி ஸ்மார்ட்போன் அம்சங்கள் அதிகம் நிறைந்த முதல் போக்கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது. சமீபத்திய போக்கோ சாதனங்கள் ரெட்மியின் கே சீரிஸ் மாடல்களின் ரீபிராண்டு செய்யப்பட்ட மாடல்களாக இருந்தன.

தற்போதைய தகவல்களின் படி போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாவது உறுதியாகிவிட்டது. இத்துடன் ரெட்மி நோட் 9 மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக இரு சாதனங்களும் சியோமி இந்தியா வலைதளத்தில் காணப்பட்டது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile