Philips S7221 5G
Philips இன்று அதன் புதிய Philips S7221 5G போனை அறிமுகம் செய்தது. இந்த போனில் இருக்கும் சுவாரசியம் என்னவென்றால் இந்த போன இன்றே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கும் கிடைக்கிறது இந்த போனில் 5,700 mAh பேட்டரியுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் 6.67″ HD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
Philips S7221 5G போனின் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் விலை ரூ,20,499 மற்றும் அதன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,22,499க்கு அறிமுகம் செய்யப்பட்டது இதனுடன் இந்த போனில் இப்பொழுது பேங்க் ஆபராக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Philips S7221 5G போனில் அம்சங்கள் பற்றி பேசினால், 6.67-inch HD (720×1,600) பிக்சல் ரேசளுசனுடன் இதில் LCD பேணல் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட் வழங்கப்படுகிறது.
இந்த போனில் octa-core Spreadtrum T765 ப்ரோசெசருடன் 8GB யின் ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் வழங்கப்படுகிறது.
புகைப்படம் எடுப்பதற்காக, பிலிப்ஸ் S7221 5G ஆனது 64 மெகாபிக்சல் பின்புற கேமரா, ஒரு ஃபிளாஷ் யூனிட் மற்றும் 16 மெகாபிக்சல் முன்புற கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேமராவின் அம்சங்களில் AI காட்சி உகப்பாக்கம் மற்றும் போர்ட்ரெய்ட் மோடு ஆகியவை அடங்கும். இந்த போனில் , அதிக சவுண்ட் வெளியீட்டிற்காக அல்ட்ரா மேக்ஸ் மோடுடன் கூடிய இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.
இதையும் படிங்க 7,050mAh பேட்டரியுடன் சத்தமில்லாமல் புதிய போனை அறிமுகம் செய்த Vivo எந்த மாடல் பாருங்க
பிலிப்ஸ் S7221 5G-யில் உள்ள கனெக்ஷன் விருப்பங்களில் இரட்டை நானோ சிம்கள், 5G, வைஃபை, ஜிபிஎஸ், குளோனாஸ், கலிலியோ, பெய்டூ, ப்ளூடூத் மற்றும் USB டைப்-சி ஆகியவை அடங்கும். இந்த ஃபோன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பளிக்கும் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
பிலிப்ஸ் S7221 5G, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் பெட்டியில் ஒரு சார்ஜர், ஒரு ஸ்கிரீன் ப்ரொடெக்டர் மற்றும் ஒரு ஃபோன் ப்ரொடெக்டர் கேஸ் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த கைபேசி 166x77x8.95 மிமீ அளவுடையது மற்றும் 200 கிராம் எடை கொண்டது.