புதிய Oppo Reno16 சீரிஸ் மார்கெட்டில் அறிமுகம், விலையோ வானம் தொடும் அளவுக்கு இருக்கிறது

HIGHLIGHTS

Oppo இந்தியாவில் இன்று அதன் புதிய Oppo Reno16 சீரிஸ் அறிமுகம் செய்தது.

இதனுடன் இதில் 50MP மெயின் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் செல்பிக்கும் 50MP கேமரா வழங்கப்பட்டுள்ளது

இரண்டு போனிலும் ColorOS 16-இன் AI Snap Key இடம்பெற்றுள்ளது

Oppo இந்தியாவில் இன்று அதன் புதிய Oppo Reno16 சீரிஸ் அறிமுகம் செய்தது. இந்த சீரிஸ் கீழ் OPPO Reno16 மற்றும் OPPO Reno16c போனை அறிமுகம் செய்துள்ளது இது இந்திவிலே முதல் முறையாக HoloVerse 3D டிசைன் மற்றும் AI Trendsetting கேமரா அம்சங்களுடன் வருகிறது இதனுடன் இதில் 50MP மெயின் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் செல்பிக்கும் 50MP கேமரா வழங்கப்பட்டுள்ளது

OPPO Reno16 சிறப்பம்சம்.

OPPO Reno16 அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.32 இன்ச் AMOLED, FHD+ டிஸ்ப்ளே உடன் இது 120HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இதில் 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது.

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 ப்ரோசெசர் , 12ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது.

இதை தவிர இந்த போனில் மிக சிறந்த போட்டோ க்ரபிக்கு இதில் OIS ஆதரவுடன் கூடிய 50MP சோனி LYT-600 ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 50MP முன்பக்க கேமரா உள்ளது மேலும் இந்த போனில் பேட்டரி பேக்கப் இந்த ஃபோனில் 6,700mAh பேட்டரி உள்ளது, இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

Reno 16 சீரிஸ் AI அம்சம்

இரண்டு போனிலும் ColorOS 16-இன் AI Snap Key இடம்பெற்றுள்ளது. இது AI Mind Space-யின் கன்டென்ட் சேமிக்கவும், கேமரா அல்லது ட்ரேன்ச்லேஷன் போன்ற டூல்களை தொடங்கவும், வொயிஸ் நாட்களை ரெக்கார்ட் செய்ய செய்யவும் உதவும் ஒரு பிரத்யேக சாப்ட்வேர் பட்டன் ஆகும். AI Mind Pilot அம்சம், பயனர்கள் தனித்தனி ஆப்களுக்கு இடையில் மாற வேண்டிய அவசியமின்றி, Gemini, Perplexity மற்றும் ChatGPT ஆகியவற்றை ஒரே இண்டர்பெசிக்கு கொண்டுவருகிறது. பிற AI கருவிகளில் செலவுகளைக் கண்காணிப்பதற்கான AI Bill Manager, AI Menu Translation, AI Live Translation, AI Recording Sticker மற்றும் AI Scan ஆகியவை அடங்கும்.

OPPO Reno16c சிறப்பம்சம்.

ஓப்போ ரெனோ 16c போனை பற்றி பேசும்போது இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,400 நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் பிரகாசம் கொண்ட 6.57-இன்ச் AMOLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது.

இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு , மீடியாடெக் டிமன்சிட்டி 7300 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது.

கேமராவைப் பொறுத்தவரை, இதில் 50MP ப்ரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP முன்புற கேமரா ஆகியவை உள்ளன. இதன் அல்ட்ராவைடு கேமரா, ரெனோ 16-ஐ விட சற்றே சிறியதாக உள்ளது. இந்த ஃபோனில் 7,000mAh பேட்டரி உள்ளது, இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .

இதையும் படிங்க Flipkart Goat sale: விற்பனைக்கு முன்னாடியே iPhone 17 மாடலின் ஆஃபர் விலை அறிவிப்பு

Oppo Reno 16 மற்றும் Reno 16c விலை தகவல்

Oppo Reno 16-ன் 8ஜிபி + 256ஜிபி வேரியன்ட் ரூ,61,999 என்ற ஆரம்ப விலையிலும், 12ஜிபி + 256ஜிபி மாடல் ₹67,999 என்ற விலையிலும் கிடைக்கும்.

ஓப்போ ரெனோ 16c-க்கு நிறுவனம் ரூ,46,999 என்ற ஆரம்ப விலையை நிர்ணயித்துள்ளது. 8ஜிபி + 128ஜிபி வேரியன்ட் ₹46,999-க்கும், 8ஜிபி + 256ஜிபி வேரியன்ட் ₹49,999-க்கும், மற்றும் 12ஜிபி + 256ஜிபி வேரியன்ட் ₹55,999-க்கும் கிடைக்கும்.

இரு மாடல்களும் ஜூலை 9 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். கஸ்டமர்கள் இவற்றை அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் ஆகியவற்றில் வாங்கிக்கொள்ளலாம். இந்த இரு ஸ்மார்ட்போன்களும் ஸ்டாரி ஒயிட், ஸ்டெல்லர் பர்ப்பிள் மற்றும் ட்வைலைட் வயலட் ஆகிய கலர்களில் தேர்வுகளில் கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :