OPPO Find X2 மற்றும் X2 Pro ஸ்னாப்டிராகன் 865 ப்ரோசெசருடன் அறிமுகமானது.

OPPO Find X2 மற்றும் X2 Pro ஸ்னாப்டிராகன் 865 ப்ரோசெசருடன் அறிமுகமானது.
HIGHLIGHTS

இரு மாடல்களிலும் 65 வாட் சூப்பர் VOOC 2.0 சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

OPPO நிறுவனம் ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ மாடலில் 48 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மாடலில் 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ மாடலில் 4260 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 65 வாட் சூப்பர் VOOC 2.0 சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி வசதி, வேப்பர் சேம்பர் லிக்விட் கூலிங், மல்டிலேயர் கிராஃபைட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஃபைண்ட் எக்ஸ்2 மாடலில் 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 3 செ.மீ. மேக்ரோ மோட், 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.7 இன்ச் 3168×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + OLED 2.5D வளைந்த கிளாஸ்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 8 ஜி.பி. / 12 ஜி.பி. LPDDR4x ரேம்
– ஃபைண்ட் எக்ஸ் 2 – 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.1 மெமரி
– 12 ஜி.பி. LPDDR4x ரேம்
– ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஒ.எஸ். 7.1
– டூயல் சிம்
– ஃபைண்ட் எக்ஸ்2 – 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS + EIS
– 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3 செ.மீ. மேக்ரோ
– 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4
– ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ – 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 7P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ், OIS + EIS
– 48 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3 செ.மீ. மேக்ரோ
– 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/3.0, OIS
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்மி அட்மோஸ்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
– ஃபைண்ட் எக்ஸ்2 – 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர் VOOC 2.0 ஃபிளாஷ் சார்ஜ்
– ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ – 4260 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர் VOOC 2.0 ஃபிளாஷ் சார்ஜ்.

விலை மற்றும்  விற்பனை 

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் செராமிக் பேக், ஓசன் மற்றும் கிளாஸ் பேக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 1130 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 83,320) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 793 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 58,575) என்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் 865 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 63,910) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் செராமிக் பேக், ஆரஞ்சு மற்றும் வெகன் லெதர் பேக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1356 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,00,535) மற்றும் 1010 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 74,850) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo