7,000mAh பேட்டரியுடன் சத்தமில்லாமல் Oppo அதன் புதிய போனை அறிமுகம் செய்தது விலை மற்ற அம்சங்களை பாருங்க

HIGHLIGHTS

Oppo இன்று அதன் புதிய Oppo F33 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது,

இந்த போனில் 7,000mAh பேட்டரி மற்றும் MediaTek Dimensity 6360 Max ப்ரோசெசர் வழங்கப்படுகிறது

இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

7,000mAh பேட்டரியுடன் சத்தமில்லாமல் Oppo அதன் புதிய போனை அறிமுகம் செய்தது விலை மற்ற அம்சங்களை பாருங்க

Oppo இன்று அதன் புதிய Oppo F33 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த போனில் 7,000mAh பேட்டரி மற்றும் MediaTek Dimensity 6360 Max ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த புதிய போன் ஒப்போவின் F31 5G மிக பெரிய வெற்றிக்கு பிறகு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo F33 5G விலை தகவல்.

இந்தியாவில் Oppo F33 5G-போனின் விலை , 6GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடலுக்கு ரூ. 31,999-யில் தொடங்குகிறது. இது 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடல்களிலும் விலை ரூ. 34,999 மற்றும் ரூ. 37,999 விலையில் வழங்கப்படுகிறது.

இந்தக் போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் பேர்ல் வொயிட் ஆகிய இரண்டு கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதை ஒப்போ இந்தியா வெப்சைட் மற்றும் ஃபிளிப்கார்ட் வழியாக வாங்கலாம். இந்தக் போன் தற்போது அந்த நிறுவனத்தின் வெப்சைட்டில் புக்கிங் கிடைக்கிறது.

Oppo F33 5G சிறப்பம்சம்.

Oppo F33 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.57-இன்ச் ஃபுல் HD+ (1,080 x 2,372 பிக்சல்கள்) பிளாட் AMOLED ஸ்க்ரீன் . 120Hz ரெப்ரஸ் ரேட் , 397PPI பிக்சல் டென்சிட்டி மற்றும் 1400 நிட்ஸ் உச்சபட்ச ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது

ஓப்போ போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால்,, ஆக்டா-கோர் மீடியாடெக் டிமான்சிட்டி 6360 மேக்ஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதனுடன் 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான UFS 2.2 உள்ளக ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த SoC, மாலி-G57 MC2 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த போனில் மிக சிறந்த ஒப்பரேட்டிங் சிஸ்டம்க்கு Android 16 அடிபடையின் கீழ் HyperOS 3. யில் இயங்குகிறது.

இதையும் படிங்க புது போன் அறிமுகம் செய்யும் குஷியில் Motorola யின் இந்த மாடலுக்கு ரூ,8,500 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபர்

கேமராக்களைப் பொறுத்தவரை, ஒப்போ F33 5G-யில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் f/1.8 அபெர்ச்சர் மற்றும் ஆட்டோஃபோகஸ் வசதிகளுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், f/2.4 அபெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சாரும் அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இதில் 16 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.

F33 5G-யில் உள்ள கனெக்ஷனில் விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 5, புளூடூத் 5.4, GPS, BDS, GLONASS, Galileo, QZSS மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP66 + IP68 + IP69 ரேட்டிங் கொண்டுள்ளது. இதில் 80W சூப்பர்VOOC வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 7,000mAh பேட்டரி உள்ளது. பரிமாணங்களைப் பொறுத்தவரை, இந்த கைபேசி 158.2×78.0x8.0mm அளவைக் கொண்டுள்ளது மற்றும் இதன் எடை 189g ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo