Oppo A9 2020 வெனிலா மின்ட் எடிஷன் 48MP கேமராவுடன் அறிமுகம்.

Oppo A9  2020 வெனிலா மின்ட் எடிஷன் 48MP  கேமராவுடன் அறிமுகம்.

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஏ9 2020 ஸ்மார்ட்போனின் வெனிலா மின்ட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் கிரேடியன்ட் வைட் டியல் நிற ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஏ9 2020 வெனிலா மின்ட் எடிஷன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி எனும் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது.

சமீபத்தில் ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டது. இதன் பேஸ் மாடல் 4 ஜி.பி. வேரியண்ட் ரூ. 15,990 விலையிலும், 8 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய தோற்றம் தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.புதிய வென்னிலா மின்ட் எடிஷன் பற்றி ஒப்போ இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. புதிய நிறம் தவிர மரைன் கிரீன்,  ஸ்பேஸ் பர்ப்பிள் மற்றும் வைட் டியல் நிறங்களில் கிடைக்கிறது. 

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் நானோ வாட்டர் டிராப் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo