OPPO A5S 4GB RAM இப்பொழுது இந்தியாவில் அறிமுகம் வாங்க பாக்கலாம் அதன் விலை பற்றி

Updated on 20-Jun-2019
HIGHLIGHTS

6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே

ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்

ஒப்போ நிறுவனம் தனது A5S ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக 2 ஜி.பி. ரேம் 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

OPPO A5S சிறப்பம்சங்கள்

– 6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
– IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி 
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் கலர் ஓ.எஸ். 5.2
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– டூயல் சிம் ஸ்லாட்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– 4ஜிவோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4230 Mah பேட்டரி

ஸ்மார்ட்போனில் மெமரி தவிர வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அந்த வகையில் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். கொண்டிருக்கும் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4230 Mah . பேட்டரி கொண்டிருக்கிறது.

விலை மற்றும் விற்பனை 
ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான், பே.டி.எம். மால், டாடா க்ளிக் மற்றும் ஸ்னாப்டீல் உள்ளிட்ட தளங்களில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இதன் விற்பனை ஆஃப்லைன் மையங்களில் நடைபெறுகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :