OTT Movie: இந்த வாரம் OTT யில் வரும் அதிரடியான திரைப்படங்கள் இதோ லிஸ்ட்

Updated on 08-May-2024
HIGHLIGHTS

மக்கள் தற்பொழுது பெரும்பாலும் OTT தளங்களின் திரைப்படங்கள் பார்க்க விரும்புகிறார்க

வீட்டில் அமர்ந்தபடி நன்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் பார்த்து மகிழலாம்

இந்த வாரம் திரைப்படங்களின் லிஸ்ட்டில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாங்க

மக்கள் தற்பொழுது பெரும்பாலும் OTT தளங்களின் திரைப்படங்கள் பார்க்க விரும்புகிறார்கள் அடிக்கும் வெயிலுக்கு வெளியே செல்ல வேண்டும் என்றால் பயம் தான் வருகிறது தங்கள் வீட்டில் அமர்ந்தபடி நன்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் பார்த்து மகிழலாம் இந்த OTTதளங்கள், வாரா வாரம் புது புது படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகயில் இந்த லிஸ்ட்டில் இந்த வாரம் திரைப்படங்களின் லிஸ்ட்டில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாங்க.

ரோமியோ (Romeo)

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ திரைப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது, யோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் இந்த திரைப்படம் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் ரோமியோ. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில், மிருணாளினி, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், இந்த திரைப்படம் மே 10ந் தேதி ஆஹா OTT தளத்தில் வெளியாக உள்ளது.

தி பாய்ஸ் (The Boys)

தி பாய்ஸ்: திரைப்படம் டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் நோவா பிலிம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ளது, தி பாய்ஸ். இப்படத்தில் ஷா ரா, கலக்கப் போவது யாரு வினோத், அர்ஷத், யுவராஜ், ஆர்யா, கிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றநிலையில், இப்படத்தை ஆஹா தமிழ் OTT தளத்தில் மே 7 முதல் பார்க்கலாம்.

ஆவேஷம்

ஆவேஷம் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாக்யுள்ளது இந்த திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில், மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 11ந் தேதி வெளியாகியது இந்த திரைப்படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இப்படம் வரும் மே 9-ந் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

கள்வன்

கள்வன் இந்த திரைப்படம் அறிமுக இயக்குனர் PV ஷங்கர் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகியுள்ளது இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடிகை இவானா, பாரதிராஜா, விஜய் டிவி தீனா என பலர் நடித்துள்ளனர்.சிறு திருட்டு வேலைகள் செய்யும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் காதலும் அரவணைப்பும் கிடைத்தால் அவன் எப்படி பட்டவனாக மாறுவான் என்பது தான் கள்வன் திரைப்படத்தின் கதை. இத்திரைப்படம் வரும் 10ந் தேதி Disney+Hotstar , Tentkotta போன்ற OTT தளத்தில் பார்க்கலாம்.

சித்திரம் சுதாரா

சித்திரம் சுதாரா:ஆர்.என்.ஹர்ஷ்வர்தன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது, இந்த திரைப்படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக அமையும் இந்த படம் டிஜி விஸ்வ பிரசாத் தயாரிப்பில் வெளியாகியுள்ளது இப்படத்தில், வருண் சந்தேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 9ந் தேதி ஆஹா OTTதளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:BSNL கொண்டு வருகிறது அதன் 4G சேவை jio-Airtel மற்றும் VI இனி ஆப்பு தான்

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :