Oppo A52 5000 Mah பேட்டரி மற்றும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம்.
ஒப்போ நிறுவனம் சத்தமில்லாமல் தனது புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ எல்சிடி டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம், கலர் ஒஎஸ் 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
Surveyஒப்போ ஏ52 சிறப்பம்சங்கள்
– 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
-அட்ரினோ 610 GPU
– 8 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– கலர் ஒஎஸ் 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 3டி கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை தகவல்.
ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் புளு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் இதன் விலை 1599 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 17,325 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
