Oppo A5 ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் HD .பிளஸ் டிஸ்ப்ளே உடன் இந்தியாவில் அறிமுகம்..!

HIGHLIGHTS

இந்தியாவில் ஒப்போ A5ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் X போன்ற நாட்ச் ஸ்கிரீன் கொண்ட ஒப்போ ஏ5 மாடல் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

6.2 இன்ச் HD  பிளஸ் டிஸ்ப்ளே, 720×1520 பிக்சல், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

இதில் போட்டோ எடுப்பதற்கு எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 , 2 எம்பி செகண்டரி பிரைமரி கேமரா, f/2.4, LED  ஃபிளாஷ் கொண்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 8 எம்பி கேமரா, AI  பியூட்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

Oppo A5  சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1520×720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 2 எம்பி செகண்டரி பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– 4ஜி Volte , வைபை, ப்ளூடூத்
– 4230 எம்.Mah . பேட்டரி

இந்தியாவில் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆஃப்லைன் தளங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒப்போ நிறுவனம் எஃப்9 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.23,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :