ஒன்ப்ளஸ் 2 ஜூன்-1 அன்று வெளி வருகிறதா?

Updated on 28-May-2015
HIGHLIGHTS

ஜூன் 1-ஆம் தேதி வெளி வர இருக்கும் ஒன்ப்ளஸ் 2 ஸ்மார்ட் கைப்பேசி, 5.5 அங்குல காட்சித்திரை, 16 எம்பி கேமரா மற்றும் ஆக்சிஜன் இயங்குதளத்தை கொண்டிருக்கும்.

ஒன்ப்ளஸ், தன் அடுத்த பதிப்பான ஒன்ப்ளஸ் 2, ஜூன்-1 அன்று வெளிவர உள்ளது என்பதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக ஒரு ட்வீட் செய்தியை உலகுக்கு அறிவித்துள்ளது. இந்த ட்வீட்-இல், ஒன்ப்ளஸ் நிறுவனம், தாங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை உலுக்குவதற்காக காத்திருப்பதாக தெரிவிப்பதோடு, மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டதாக தாங்கள் உணர்வதை பகிர்ந்துள்ளது. 

ஒன்ப்ளஸ்  ஒன் ஸ்மார்ட் கைப்பேசிக்கான அடுத்த பதிப்பு குறித்த வதந்திகள், சில காலமாக வந்த வண்ணம் இருந்தது. இந்த புதிய பதிப்பு ஒன்ப்ளஸ் 2 என்று அழைக்கப்படுவதோடு, அப்போ ஃபைண்ட் 7-ஐ அடிப்படையாக கொண்டிருக்கும். இது 5.5. அங்குல 2கே க்வாட் உயர் வரையறை காட்சித்திரையொடு வருகின்றது. இது ஸ்நாப்டிராகன் 810 செயலியுடன், 3ஜிபி அல்லது 4 ஜிபி தற்காலிக நினைவகமும் கொண்டுள்ளது. மேலும் இதில் முகப்பு விசையுடன் இணைந்த கைரேகை ஸ்கேனர்-உம் உள்ளது. இந்த ஸ்மார்ட் கைப்பேசி 16 MP பின்பக்க கேமராவும் 5 MP முன்பக்க கேமராவும் கொண்டிருக்கிறது. வெளித்தொடர்பு இணைய வசதிக்காக இந்த கருவியில், வை-ஃபை, ப்ளுடூத், யூஎஸ்பி, ஜிபிஎஸ் மற்றும் என்எஃப்சி ஆதரவு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த கைப்பேசி 3300 எம்ஏஹெச் பேட்டரி-உடன் வருகிறது. இந்த கருவி ஆக்சிஜன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஆக்சிஜன், அண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட, ஒன்ப்ளஸ் ஓன்-இன் புதிய, ரோம் நினைவக வகையை சார்ந்ததாகும்.அறிக்கைகளின்படி, ஒன்ப்ளஸ் 2, ஒன்ப்ளஸ் ஒன் ஸ்மார்ட் கைப்பேசி-ஐ விட சற்றே விலை கூடுதலாக இருக்கும். ஒன்ப்ளஸ் ஒன்-இன் 16 ஜிபி வகையறா ரூ.18,999-க்கு வெளியிடப்பட்ட நிலையில், அதன் 64ஜிபி வகையறா ரூ. 21,999-க்கு கிட்டுகிறது.
நாங்கள் எப்போதும் தொழில்நுட்ப துறையை உலுக்குவதற்கான வழிகளை எதிர்பார்த்திருக்கிறோம். இது மாற்றத்திற்கான நேரம் என நாங்கள் கருதுகிறோம். ஜூன் 1 அன்று மேலும் தெரிந்து கொள்ளுங்கள். pic.twitter.com/odrsSko6dB 

ஒன்ப்ளஸ் ஒன் ஸ்மார்ட்கைப்பேசி,  அதன் விலை காரணமாக உலக அளவில் பெரிய அலையை ஏற்படுத்தியது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட, இதே அம்சங்களை கொண்ட  ஏனைய அண்ட்ராய்ட் பிரதான ஸ்மார்ட் கைப்பேசிகளின் 50% விலையைக் காட்டிலும், இதன் விலை  குறைவாக இருந்தது . ஒன்ப்ளஸ் ஒன், 1080 x 1920 படவரைப்புள்ளி ரெசொலுஷன் உடன் கூடிய  5.5 அங்குல காட்சித்திரையை கொண்டுள்ளது. இது அண்ட்ராய்ட் 4.4-ஐ அடிப்படையாக கொண்டு இயங்குவதோடு, நான்கு உள்ளகங்கள் கொண்ட க்வால்காம் ஸ்நாப்டிராகன் மையசெயலியை கொண்டுள்ளது.இது 3 ஜிபி தற்காலிக நினைவகமும், 16/64 உள்ளக நினைவகமும் கொண்டுள்ளது. வை-ஃபை ஆதரவு, ப்ளூடூத், யூஎஸ்பி மற்றும் என்எஃப்சி போன்ற வெளிதொடர்பு இணைய தெரிவுகள் உள்ளன. இந்த ஸ்மார்ட் கைப்பேசி, இரு எல்ஈடி மின்வெட்டோளி கொண்ட 13 எம்பி பின்பக்க கேமராவும், 5 எம்பி முன் பக்க கேமராவும் கொண்டுள்ளது.மேலும் இது 3100 எம்ஏஹெச் பேட்டரி-ஐ கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருப்பதால், அழைப்பு அடிப்படையிலான விநியோகத்தை ஏற்கனவே நிறுத்தி விட்டது.  ஒன்ப்ளஸ் ஒன்-இன் இரு வகையறாக்களும், இப்போது அழைப்பு அடிப்படையில் இல்லாமல், நேரடியாக வாங்க கிடைக்கிறது. எடை குறைவான, மலிவான ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்கைப்பேசி பதிப்பை இந்த ஆண்டில் வெளியிடுவதில், நிறுவனம் முனைப்பாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Silky Malhotra

Silky Malhotra loves learning about new technology, gadgets, and more. When she isn’t writing, she is usually found reading, watching Netflix, gardening, travelling, or trying out new cuisines.

Connect On :