OnePlus Nord இந்தியாவில் அறிமுகம் இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.

OnePlus Nord இந்தியாவில் அறிமுகம் இதன் சிறப்பு  என்ன வாங்க பாக்கலாம்.
HIGHLIGHTS

புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Oneplus Nord ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், எக்ஸ்51 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் எஃப்ஹெச்டி பிளஸ் ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. . 

OnePlus Nord  சிறப்பம்சங்கள்

– 6.44 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 408 ppi 20:9 ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
– அட்ரினோ 620 GPU
– 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– 12 ஜிபி ரேம், 256 ஜிபி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.75, OIS + EIS
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.25
– 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
– 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, f/2.45
– இன் டிஸ்பஅளே கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப் சி, சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப்-சி
– 4115 எம்ஏஹெச் பேட்டரி
– ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்பி இன்-ஸ்கிரீன் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 
 
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், எக்ஸ்51 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4115 எம்ஏஹெச் பேட்டரி, ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது

விலை  தகவல் ;-

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் புளூ மார்பிள் மற்றும் கிரே ஆனிக்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஒன்பிளஸ் நார்டு 8 ஜிபி, 128 ஜிபி மாடல் மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல்களின் விற்பனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்குகிறது. 6 ஜிபி ரேம் விற்பனை தேதி அறிவிக்கப்படாமல்லை செப்டம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo