OnePlus Nord 2- கிரீன் கலர் வேரியண்ட்டின் விற்பனை தேதி அறிவிப்பு.
கோ க்ரீன் வூட்ஸ் நிற ஒன்பிளஸ் நோர்ட் 2 விற்பனை தேதி அறிவிப்பு
நாளை, ஆகஸ்ட் 26 முதல் வாங்க கிடைக்கும்
ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.27,999 க்கும்,
கடந்த மாதம், OnePlus நிறுவனம் இந்தியாவில் அதன் Nord 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இது நாட்டில் ப்ளூ ஹேஸ் மற்றும் கிரே சியரா வண்ண வகைகளில் ரூ.27,999 என்கிற ஆரம்ப விலையில் வெளியானது.
Surveyஅதாவது ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.27,999 க்கும், அதன் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.29,999 க்கும் மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.34,999 க்கும் வாங்க கிடைக்கும்.
வெளியீட்டின் போது, ஏற்கனவே மற்ற பகுதிகளில் கிடைக்கும் க்ரீன் வூட்ஸ் வண்ணம் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் உறுதியளித்தது. வாக்குறுதியளித்தபடி, OnePlus Nord 2 ஸ்மார்ட்போனின் க்ரீன் வூட்ஸ் கலர் வேரியண்ட் ஆனது இந்திய சந்தையில் நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
சுவாரஸ்யமாக, இந்த வண்ண மாறுபாடு இந்தியாவில் 'கோ கிரீன் வூட்ஸ்' என்று அழைக்கப்படும், மேலும் இது மற்ற வண்ண / ஸ்டோரேஜ் வகைகளின் அதே விலைக்கு விற்பனை செய்யப்படும்.
இது ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் மற்றும் அமேசான் இந்தியா போர்ட்டலில் நாளை (ஆகஸ்ட் 26) மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.
அம்சங்களை நினைவூட்டும் வண்ணம், OnePlus Nord 2 ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அளவிலான லிக்விட் AMOLED டிஸ்ப்ளேவை கொண்ட நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் ஆகும். இது Full HD+ ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ஸ்க்ரீன் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது.
இதன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 766 மெயின் சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் கடைசியாக 2 எம்பி மோனோக்ரோம் சென்சார் உள்ளது. இது 32MP சோனி IMX615 செல்பீ கேமாராவையும் பேக் செய்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
