மீண்டும் வெடித்து சிதறிய Oneplus Nord 2 ட்விட்டரில் பயனர் ட்விட் வைரல் .

HIGHLIGHTS

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக பயனர் ஒருவர் ட்விட்டரில் குற்றம்சாட்டி இருக்கிறார்

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பயனர் வெடித்து சிதறிய நார்டு 2 புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை

ஒன்பிளஸ் சார்பில் பயனருக்கு ட்விட்டரில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக பயனர் ஒருவர் ட்விட்டரில் குற்றம்சாட்டி இருக்கிறார். சில தினங்களுக்கு முன் இதே போன்று மற்றொரு பயனரும் தனது நார்டு 2 வெடித்து சிதறியதாக குற்றம்சாட்டி இருந்தார்.
 
தனது தந்தைக்கு வாங்கிய நார்டு 2 கட்டிலில் இருக்கும் போது வெடித்து சிதறியதாக அவர் தெரிவித்தார். வெடித்ததால் தீப்பற்றி எரிந்த நார்டு 2 ஸ்மார்ட்போனினை தனது தந்தை சிறு கம்பு கொண்டு கட்டிலில் இருந்து தள்ளிவிட்டதாக பயனர் தெரிவித்தார்.

https://twitter.com/chakrav16005428/status/1424986840835055617?ref_src=twsrc%5Etfw

அதில், "எதிர்பாராதவிதமாக அரங்கேறிய சம்பவத்தால் உங்களின் தந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நம்புகிறோம். இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இதற்கான காரணத்தை கண்டறிய தயவு செய்து குறுந்தகவல் அனுப்புங்கள்," என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பயனர் வெடித்து சிதறிய நார்டு 2 புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. மேலும் அவர் குற்றச்சாட்டு அடங்கிய ட்விட்டர் பதிவும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது. எனினும், ஒன்பிளஸ் சார்பில் பயனருக்கு ட்விட்டரில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :