Oneplus யின் குறைந்த விலை கொண்ட போன் OnePlus Nord என்ற பெயரில் இருக்கும்.

Oneplus யின் குறைந்த விலை கொண்ட போன் OnePlus Nord என்ற பெயரில் இருக்கும்.
HIGHLIGHTS

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் Oneplus Nord என அழைக்கப்பட இருக்கிறது.

ஒன்பிளஸ் வெளியிட்ட வீடியோ Oneplus Nord ஸ்மார்ட்போன் உருவாக்கும்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் ஒரு வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. இந்த வெளியீட்டு நிகழ்வின் கோஷம் '‘New Beginnings' இந்த நிகழ்வில், நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும். நிகழ்வுக்கு முன்பு, ஒன்பிளஸ் அதன் ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்படவுள்ள புதிய தயாரிப்பின் பெயரை அறிவித்தது. புதிய ஒன்பிளஸ் நோர்டுடன், நிறுவனம் குறைந்த விலை பிரிவில் தயாரிப்பு அறிமுகங்களை அறிமுகப்படுத்துகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் ஒன்பிளஸ் நார்டு என அழைக்கப்பட இருக்கிறது. இதனை ஒன்பிளஸ் புதிய வீடியோவில் தெரியப்படுத்தி இருக்கிறது. ஒன்பிளஸ் வெளியிட்ட வீடியோ ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளின் போது எடுக்கப்பட்டதாகும்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

நான்கு பாகங்களாக வெளியாக இருக்கும் வீடியோ சீரிஸ் இரண்டாவது வீடியோ ஜூலை 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போதைய வீடியோவின் ஒரு கட்டத்தில் ஸ்மார்ட்போன் ஒன்று டூயல் செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 32 எம்பி மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

இதுதவிர 64 எம்பி+16 எம்பி+2 எம்பி கேமரா சென்சார்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஐரோப்பா மற்றும் இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் நார்டு இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo