OnePlus இந்த ஆண்டு அடுத்து அடுத்து 6 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யவுள்ளது.

HIGHLIGHTS

ஒன்பிளஸ் இந்த ஆண்டு பல சாதனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது

இந்த லிஸ்டில் OnePlus 10 Pro, OnePlus Nord CE 2 Lite, OnePlus Nord 2T, OnePlus 10R, OnePlus Nord 3 மற்றும் OnePlus 10 Ultra போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது.

லீக் யின் படி இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களையும் அறிமுக செய்யும் என லீக் தகவல் வெளியாகியுள்ளது.

OnePlus இந்த ஆண்டு அடுத்து அடுத்து 6 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யவுள்ளது.

ஒன்பிளஸ் இந்த ஆண்டு பல சாதனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஆம், OnePlus பிராண்டின் சாலை வரைபடம் சமீபத்திய கசிவில் தெரியவந்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் ஒன்றல்ல… இரண்டல்ல… 6 சாதனங்களை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக இந்த வரைபடத்தில் தெரியவந்துள்ளது.இந்த லிஸ்டில் OnePlus 10 Pro, OnePlus Nord CE 2 Lite, OnePlus Nord 2T, OnePlus 10R, OnePlus Nord 3 மற்றும் OnePlus 10 Ultra போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது. லீக் யின் படி இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களையும் அறிமுக செய்யும் என லீக் தகவல் வெளியாகியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் ஒன்பிளஸ் சாலை வரைபடம் பற்றிய தகவல்களை கசியவிட்டார். இந்த பட்டியலில் உள்ள முதல் போன் OnePlus 10 Pro ஆகும். இந்த போன் கடந்த சில நாட்களாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதற்காக தலைப்புச் செய்திகளில் உள்ளது. கசிவை நம்புவதாக இருந்தால், இந்த தொலைபேசி மார்ச் 23 அல்லது 24 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். ஒன்பிளஸ் 10 ப்ரோ ஜனவரி மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சமீபத்திய Snapdragon 8 Gen 1 செயலியைக் கொண்டுள்ளது. போனின் டிஸ்ப்ளே 120Hz அப்டேட் வீதத்துடன் வந்துள்ளது. மேலும், புகைப்படம் எடுப்பதற்காக மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது.

இதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் ஒன்பிளஸ் நார்ட் 2T, மே மாதம் ஒன்பிளஸ் 10R, ஜூலை மாதம் ஒன்பிளஸ் நார்ட் 3(நார்ட் ப்ரோ), அடுத்த ஓரிரு மாதங்களில் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா (10 ப்ரோ பிளஸ்) ஸ்மார்ட்போன்களும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள கடைசி ஃபோன் OnePlus 10 Ultra ஆகும், இதை நிறுவனம் OnePlus 10 Pro Plus என்ற பெயரிலும் கொண்டு வரலாம். லீக் படி, இந்த போன் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும். பிளாட் டிஸ்ப்ளே கொண்ட இந்த போனில் ஃபிளாக்ஷிப் பிராசஸரைக் காணலாம்.
 
இதைத்தவிர ஒன்பிளஸ் நார்ட் TWS இயர்பட்ஸ் மற்றும் நார்ட் ஸ்மார்ட் வாட்சும் வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட் வார்ட்ச் இந்திய மதிப்பில் ரூ.10,000-ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile