OnePlus 9RT அசத்தலான அம்சங்களுடன் அக்டோபர் 13 அறிமுகமாகும்.

HIGHLIGHTS

OnePlus 9 9RT யின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை Weibo வழியாக உறுதி செய்துள்ளது.

அக்டோபர் 13 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஒன்பிளஸ் 9ஆர் மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வரும்

OnePlus 9 9RT யின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை Weibo  வழியாக உறுதி செய்துள்ளது. இந்த போன் அக்டோபர் 13 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வெளியீட்டு நிகழ்வு 7:30 PM CST (5:00 PM IST) இல் நடைபெறும். நிகழ்வில், சீன நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் பட்ஸ் Z2 உண்மையான வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்களையும் அறிமுகப்படுத்தும் என்று வெய்போவில் வெளியிடப்பட்ட டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒன்பிளஸ் போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 9ஆர் மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வரும் என்று ஊகிக்கப்படுகிறது.

வெளியீட்டு தேதியை அறிவிப்பதோடு, ஒன்பிளஸ் 9RT ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உறுதி செய்வதற்காக OnePlus நிறுவனம் சில படங்களையும் வெளியிட்டது.

அதன் வழியாக குறிப்பிட்ட ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமராக்கள் இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் டி சீரீஸ் போல "வேகமான செயல்திறனை வழங்கும்" என்று டீஸ் செய்யப்படுகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ் 9 ஆர்டி உடன் நிறுவனம் அடுத்த வாரம் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் 2 மாடலையும் அறிமுகப்படுத்துகிறது.

OnePlus 9RT ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி:

ஒன்பிளஸ் 9 ஆர்டியின் வெளியீட்டு தேதியை அறிவிக்க ஒன்பிளஸ் நிறுவனம் வெய்போ வழியாக டீஸர்களை வெளியிட்டது. குறிப்பிட்ட வெளியீட்டு நிகழ்வு சீனாவில் அக்டோபர் 13 அன்று மாலை 7:30 மணிக்கு CST ஆசியாவில் (மாலை 5 மணி IST) நடைபெறும்.

OnePlus 9RT உடன் இணைந்து, OnePlus Buds Z2 ஆனது நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸாக அறிமுகமாகும்.

OnePlus 9RT ஆனது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஊகிக்கப்படுகிறது, இருப்பினும் இது சீன வெளியீட்டுடன் நடக்குமா அல்லது வேறு தேதியில் நடக்குமா என்பதை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

OnePlus 9RT ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) விலை:

OnePlus 9RT ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.23,300 மற்றும் தோராயமாக ரூ.34,900 இடையே எங்காவது ஒரு புள்ளியில் அமரலாம்.

ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே சீனாவில் ஒன்பிளஸ் 9 ஆர்டி மாடலுக்கான ப்ரீ ஆர்டர்களை எடுக்கத் தொடங்கியுள்ளது. மற்றும் சீன இ-காமர்ஸ் தளமான ஜேடி.காம் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் பக்க வடிவமைப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :