OnePlus யின் புதிய போன் அறிமுகம் வேற லெவல் அம்சங்கள் உண்டு ஆனா விலை நம்ம நடுங்க வச்சிடும்

HIGHLIGHTS

Oneplus இன்று அதன் புதிய Oneplus 15 போனை அறிமுகம் செய்துள்ளது

OnePlus 15 இந்தியாவின் முதல் Snapdragon 8 Elite Gen 5 SoC ஸ்மார்ட்போன் ஆகும்

இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

OnePlus யின் புதிய போன் அறிமுகம் வேற லெவல் அம்சங்கள் உண்டு ஆனா விலை நம்ம நடுங்க வச்சிடும்

Oneplus இன்று அதன் புதிய Oneplus 15 போனை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த போனில் 7300mAh பேட்டரி மற்றும் பின்புறத்தில் மூன்று செட்டப் கேமராவுடன் ப்ரீமியம் லுக்கில் தோன்றுகிறது இதை தவிர இதில் புதிய OnePlus 15 இந்தியாவின் முதல் Snapdragon 8 Elite Gen 5 SoC ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oneplus 15 டாப் அம்சங்கள்

டிஸ்ப்ளே:- Oneplus 15 யின் இந்த போனில் 6.78-இன்ச் கொண்ட 1.5K LTPO டிப்ளே பேணல் கொண்டுள்ளது இதனுடன் இதில் 165Hzரெப்ரஸ் ரேட்டுடன் 2772*1272 (QHD+) மற்றும் 1.5K ரேசளுசன் வழங்குகிறது 20/9 எஸ்பெக்ட் ரேசியோ உடன் வருகிறது, மேலும் இந்த போனில் நீட நேரம் கேமிங் விளயடபோதும் கண் வலிக்காமல் இருக்கும் Eye Comfort மோட் வழங்குகிறது

ப்ரோசெசர் :-இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இந்த போனில் Snapdragon® 8 Elite Gen5 ப்ரோசெசருடன் இது OxygenOS 16.0 அடிபடையின் கீழ் Android™ 16 யில் இயங்குகிறது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்:-இந்த போனில் ரேம் மற்றும் 12GB/16GB LPDDR5X Ultra/Ultra+ உடன் 256GB/512GB/ UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

கேமரா :- OnePlus 15 போனில் மூன்று கெமர செட்டப் வழங்கப்படுகிறது அதில்,50MP ப்ரைம் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள மற்ற கேமராக்களில் OIS-சப்போர்டுடன் 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். OnePlus 15 ஆனது 8K ரெசளுசன் வீடியோவைப் ரெக்கார்டிங் Hasselblad-டியூன் செய்யப்பட்ட அமைப்பையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த போனில் செல்பிக்கு 32MP வழங்கப்பட்டுள்ளது .

பேட்டரி:-OnePlus 15 யின் மற்றொரு சிறப்பம்சம் அதன் பெரிய பேட்டரி ஆகும். இந்த போன் 7,300mAh பேட்டரியுடன் வருகிறது, இது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் வயர்லெஸ் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது மேக்னட் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது. இந்த போன் 5,000mAh பேட்டரியை 13 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என்றும், 5 நிமிட சார்ஜிங்கில் 6 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்க முடியும் என்றும் OnePlus கூறுகிறது.

கனெக்டிவிட்டி:-இந்த போனில் இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், IR பிளாஸ்டர், NFC மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. இது டூயல்-பேண்ட் அல்லது ட்ரை-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, GPS, BDS, GALILEO, QZSS (L1+L5) மற்றும் NavIC ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த சாதனம் IP68 + IP69 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் சைஸ் 161.42×76.67×8.10 mm மற்றும் எடை 211 கிராம் ஆகும் .

Oneplus 15 விலை தகவல்

இந்தியாவில் OnePlus 15 ஸ்மார்ட்போனின் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் அளவு கொண்ட அடிப்படை வகையின் விலை ரூ.72,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 16GB RAM மற்றும் 512GB இன்டெர்னல் வசதி கொண்ட ஹை எண்டு வகையின் விலை ரூ.79,999 ஆகும். இருப்பினும், HDFC பேங்க் சலுகையுடன் கஸ்டமர் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ரூ.4,000 தள்ளுபடியுடன் வாங்கலாம், இதன் மூலம் அடிப்படை வகையின் விலை ரூ.68,999 ஆக இருக்கும் .

இந்த முதன்மை கைபேசி இன்று இரவு 8 மணிக்கு இந்தியாவில் விற்பனைக்கு வரும். இது நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் வழியாகக் கிடைக்கும். நிறுவனம் OnePlus 15 ஐ Infinite Black, Sand Storm மற்றும் Ultra Violet வண்ணங்களில் வழங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo