உலகளவில் சந்தையில் கடந்த ஆண்டு Nubia X ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டது, அதனை தோடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் தற்பொழுது சீனாவில் இதன் Nubia X 5ஜி சவேரியண்ட் சீனாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Nubia X 5ஜி ஸ்மார்ட்போன்
Nubia X 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காமின் X50 மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா மற்றும் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட்டிற்கு கத்தில் 5ஜி லோகோ இடம்பெற்றிருக்கிறது.
எனினும், இதில் Nubia X 4ஜி வேரியண்ட்டில் வழங்கப்பட்ட பெரும்பான்மை அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் புதிய 5ஜி வேரியண்ட் விற்பனை விவரங்களும் வெளியாகவில்லை.
முன்னதாக வெளியான Nubia X ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD பிளஸ் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் பின்புறம் 5.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் AMOLED இரண்டாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், 24 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் பக்காவட்டில் இருபுறங்களிலும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 3800 Mah . பேட்டரி, குவால்காமின் குவிக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Nubia X 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைனில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், பார்க்க நுபியா எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. Nubia X 5ஜி ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை நுபியா இன்னும் அறிவிக்கவில்லை.