NUBIA PLAY நான்கு கேமரா மற்றும் 5100mah பேட்டரியுடன் அறிமுகமானது.

NUBIA PLAY  நான்கு கேமரா மற்றும் 5100mah பேட்டரியுடன் அறிமுகமானது.
HIGHLIGHTS

லிக்விட் கூலிங் டியூப் மற்றும் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இசட்டிஇ நிறுவனத்தின் நுபியா பிராண்டு தனது நுபியா பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், லிக்விட் கூலிங் டியூப் மற்றும் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நுபியா பிளே சிறப்பம்சங்கள்:

– 6.65 இன்ச் 1080×2340 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
– அட்ரினோ 620 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் நுபியா யுஐ 8.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்பி பிரைமரி கேமரா,  0.8μm, f/1.75, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி மேக்ரோ
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 12 எம்பி செல்ஃபி கேமரா
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டிடிஎஸ்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5100 எம்ஏஹெச் பேட்டரி
– 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2  எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 12 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான கேமிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் டச் கேம் ட்ரிகர் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

விலை தகவல்.

நுபியா பிளே ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் இதன் விலை 2399 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 26,095 முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 2999 யுவான், இந்திய திப்பில் ரூ. 32,535 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo