இந்தியாவில் ப்ரீமியம் போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் Nothing Phone 3 யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அறிமுகத்தின்போது பிரீமியம் ஃபிளாக்ஷிப் பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட அதே தொலைபேசிதான் இது. இப்போது, கணிசமான தள்ளுபடிகள், வங்கிச் சலுகைகள் மற்றும் EMI விருப்பங்களுடன், குறைந்த விலையில் ஹை எண்டு ப்ளாக்ஷிப் அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனை விரும்பும் பயனர்களை இந்தச் சலுகை ஈர்க்கிறது.
அமேசான் இந்தியாவில், நத்திங் ஃபோன் 3-இன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ,84,999-லிருந்து ரூ,44,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய ரூ,40,000 நேரடித் தள்ளுபடியாகும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களுக்கு ₹2,249 வரை கூடுதல் கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.
இந்நிறுவனம், மாதத்திற்கு சுமார் ₹5,000 முதல் நோ கோஸ்ட் EMI விருப்பங்களையும் வழங்குகிறது. கருப்பு நிற மாடலின் விலை ரூ,44,999 ஆகவும், வெள்ளை நிற மாடல் சற்றே விலை அதிகமாகவும் உள்ளது.
இதையும் படிங்க வேற லெவல் ஜாக் பாட் ஆபர் Redmi யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,17,000 வரை டிஸ்கவுண்ட்
நத்திங் போன் 3, 120hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட் கொண்ட 6.67-இன்ச் AMOLED பேனலுடன் வருகிறது. இந்த சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மற்றும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் வருகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது, இந்த போனில் EIS உடன் 50MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.
இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 4 சிப்செட் உடன் வருகிறது, 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5,500 mAh பேட்டரியைப் பெறுகிறது. இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் OS 3.5 யில் இயங்குகிறது. இது 5 வருட OS மற்றும் 7 வருட பாதுகாப்பு கனேக்சங்களை வழங்கும். இது டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் IP68 சர்டிபிகேஷன் வழங்குகிறது .