Nothing Phone 1 அறிமுகம் அறிவிப்பு ஐபோனுக்கு சரியான போட்டியை தரும்…

HIGHLIGHTS

Nothing Phone 1 விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும்

கஸ்டம் ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கப்படலாம்

Nothing Phone 1 அறிமுகம் அறிவிப்பு ஐபோனுக்கு சரியான போட்டியை தரும்…

கார்ல் பெயின் புதிய நிறுவனமான நத்திங் தனது முதல் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஸ்னாப்டிராகன் செயலி நத்திங் ஃபோன் 1 உடன் கிடைக்கும். இந்த போனின் ப்ரோடோடைப்பும் தெரியவந்துள்ளது, இதைப் பார்த்தால் நத்திங் போன் 1 வெளிப்படையான வடிவமைப்புடன் வெளியிடப்படும் என்று கூறலாம். கார்ல் பெய் OnePlus இன் இணை நிறுவனர் ஆவார், இருப்பினும் அவர் OnePlus உடனான தனது உறவை இப்போது துண்டித்துள்ளார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nothing Phone 1 நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து ஒரு டீஸரும் வெளியிடப்பட்டுள்ளது, இருப்பினும் நிறுவனம் இன்னும் போனின் வெளியீட்டு தேதி குறித்த தகவல்களைத் தெரிவிக்கவில்லை, ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் போன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போனில் சமீபத்திய Qualcomm Snapdragon பிராசஸர் வழங்கப்பட்டிருக்கும் என்றும், ஆண்ட்ராய்டு மற்றும் நத்திங் ஓ.எஸ்ஸில் இயங்கும் என கூறப்படுகிறது. 

ஒன்பிளஸ் உடன் போட்டியிடாது, ஆனால் ஆப்பிளின் ஐபோனுடன் நத்திங் போன் 1 போட்டியிடும் என்று கூறப்படுகிறது. நத்திங்கில் இருந்து இந்த போனில் நத்திங் ஓஎஸ் கொடுக்க முடியாது, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் சிறந்த தூய ஆண்ட்ராய்டு அனுபவம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பயனர்கள் ஃபோனின் கிராபிக்ஸ், ஒலி போன்றவற்றை தங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்க முடியும்.
 
இந்த போனின் இயக்கம் வேகமாகவும், மென்மையாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ப்ளாட்வேர்கள் எதுவும் இந்த போனில் தரப்படாது. நத்திங் போனிற்கு 3 வருடம் ஓ.எஸ் அப்டேட்டுகள் உறுதியாக வழங்கப்படும். 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்டுகளும் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போன் குறித்த மேலும் தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile