Nokia X71, ஒரு 48Mp கேமரா மற்றும் ஒரு 6.3 இன்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் .

HIGHLIGHTS

நீண்ட நாட்களாக பல வதந்தி வந்து கொண்டே இருந்த நிலையில்,HMD குளோபல் நிறுவனம் நோக்கியா X71 ஸ்மார்ட்போனினை தாய்வானில் அறிமுகம் செய்துள்ளது.

Nokia X71, ஒரு 48Mp  கேமரா மற்றும் ஒரு  6.3 இன்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் .

நீண்ட நாட்களாக பல வதந்தி வந்து கொண்டே இருந்த நிலையில்,HMD  குளோபல் நிறுவனம் நோக்கியா X71 ஸ்மார்ட்போனினை தாய்வானில் அறிமுகம் செய்துள்ளது. புதிய நோக்கியா X71 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

NokiaX71 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2316×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.3:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 0.8µm பிக்சல், 6P லென்ஸ், ZEISS ஆப்டிக்ஸ்
– 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு லென்ஸ்
– 5 எம்.பி. கேமரா, f/2.4, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
– நோக்கியா OZO ஆடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3500Mah . பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

செல்ஃபி எடுக்க 16 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா, 93 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, மூன்று பிரைமரி கேமரா: 48 எம்.பி. பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், ஏ.ஐ. வசதி, 5 எம்.பி. டெப்த் கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3500Mah  பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. தாய்லாந்தில் இதன் விலை NT$ 11,990 (இந்திய மதிப்பில் ரூ.26,875) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் நோக்கியா 6.2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo