NOKIA அடுத்த UPCOMING 5G போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யும்.

NOKIA  அடுத்த UPCOMING 5G  போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யும்.

HMD  குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டிங்கின் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என நோக்கியா அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்தார்.

தற்சமயம் விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களை விட நோக்கியா 5ஜி மொபைல் விலை பாதியாக நிர்ணயிக்கப்படும் என ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்தார். அந்த வகையில் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் விலை 500 முதல் 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,600 முதல் ரூ. 42,700) வரை நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

பல்வேறு ஸ்மார்டபோன் நிறுவனங்களும் புதிதாக 5ஜி ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வரும் நிலையில், ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைவாக நிர்ணயிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

நோக்கியா தவிர ஹூவாய் மற்றும் மீடியாடெக் நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் விலையும் குறைவாக இருக்கும் என தெரிகிறது. 

புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கென ஹெச்.எம்.டி. குளோபல் சிப்செட் உருவாக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சர்விகாஸ் தெரிவித்தார். புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை. எனினும் வெளியீட்டிற்கு முன் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo