NOKIA G50 லீக் வெளியானது இந்த 5G போன் குறைந்த விலையில் இருக்கும்

HIGHLIGHTS

நோக்கியாவின் அடுத்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் லீக் ஆனது

நோக்கியா ஜி 50 பற்றிய விவரங்கள் வெளியானது

NokiaMob.net வலைதளத்தில் அதன் ஸ்கிரீன் ஷாட்டையும், அதில் உள்ள வீடியோ டீசரை பற்றிய விவரங்களையும் கைப்பற்ற முடிந்துள்ளது.

நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன் அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னால் தற்செயலாக சொந்த நிறுவனத்தாலேயே லீக் செய்யப்பட்டது.

வரவிருக்கும் ஜி50 ஆனது நோக்கியா ஜி10 மற்றும் நோக்கியா ஜி20 ஆகியவற்றை உள்ளடக்கிய நோக்கியா ஜி தொடரின் புதிய மாடலாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

நினைவூட்டும் வண்ணம், ஜி10, ஜி20 மாடல்கள் இரண்டு தனித்துவமான நிறங்கள் மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் வடிவமைப்பு, ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருந்தது.

மிகவும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்!

நோக்கியா ஜி 50 ஆனது நோக்கியா ஸ்மார்ட்போன் போர்ட்போலியோவில் மிகவும் மலிவு விலையிலான 5 ஜி ஸ்மார்ட்போனாக வரும் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் இது இரண்டு வெவ்வேறு ஸ்டோரேஜ் விருப்பங்களின் கீழும் வரலாம்.

தற்செயலாக ஆனால் அதிகாரப்பூர்வமாக!

பிரான்சில் உள்ள நோக்கியா மொபைல் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தவறுதலாக வெளியிடப்பட்ட ஒரு போஸ்டின் மூலம் தான் நோக்கியா ஜி 50 பற்றிய விவரங்கள் வெளியானது.

அந்த போஸ்ட் ஆன்லைனுக்கு வந்ததுமே டெலிட் செய்யப்பட்டது என்றாலும், NokiaMob.net வலைதளத்தில் அதன் ஸ்கிரீன் ஷாட்டையும், அதில் உள்ள வீடியோ டீசரை பற்றிய விவரங்களையும் கைப்பற்ற முடிந்துள்ளது.

என்னென்ன அம்சங்கள் / தகவல்கள் லீக் ஆனது?

அந்த போஸ்டில் மிகவும் வெளிப்படையாக, நோக்கியா ஜி 50 ஸ்மார்ட்போனின் ப்ளூ மற்றும் மிட்நைட் சன் நிறங்களை காணமுடிந்தது.

மேலும் அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் வரவிருக்கும் நோக்கியா போன் ஆனது 5 ஜி இணைப்பு மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சாரை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்ற அம்சங்களை உறுதிப்படுத்தியது.

தற்போதுள்ள நோக்கியா ஜி 10 மற்றும் நோக்கியா ஜி 20 போன்ற வடிவமைப்பையே இந்த போனும் கொண்டுள்ளது. அதாவது முன்புறத்தில் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்பிளே நாட்ச் உள்ளது மற்றும் பின்புறம் கிரேடியன்ட் பினிஷ் உள்ளது.

லீக் ஆனாலும் வாயை திறக்காத எச்எம்டி குளோபல்!

நோக்கியா பிராண்ட் உரிமம் பெற்ற எச்எம்டி குளோபல் நிறுவனம், நோக்கியா ஜி 50 பற்றிய எந்த விவரங்களையும் இன்னும் வெளியிடவில்லை.

இருப்பினும், சில முந்தைய அறிக்கைகள் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மலிவு விலையிலான ஒரு 5G நோக்கியா மாடலாக இருக்கலாம் என்றும், இது குவால்காம் ஸ்னாப்டிராகன் SoC – ஒருவேளை ஸ்னாப்டிராகன் 480 ஐ கொண்டு இயங்கலாம் என்றும் பரிந்துரைக்கிறது.

மேலும் நோக்கியா G50 ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-இன் கீழ் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன விலைக்கு வரும்?

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நோக்கியா ஜி 50 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது இங்கிலாந்தில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.11,000 க்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் அதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆஸ்திரேலியாவில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.25,400 க்கு வெளியாகலாம் என்றும் தகவல்கிடைத்துள்ளது.

HMD குளோபல் நிறுவனம் அதன் நோக்கியா G50-ஐ வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தலாம். இருப்பினும் தற்போது வரை, வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடையாது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :