நோக்கியா தொடர்ந்து தனது 5 ஜி போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தி வருகிறது, இப்போது எச்எம்டி குளோபல் புதிய நோக்கியா ஜி 300 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா G300 நிறுவனத்தின் மிக மலிவான 5G போன் ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் HMD 4 ஜி-மட்டும் தொடராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜி-சீரிஸுடன் தொடர்புடையது, ஆனால் பின்னர் நோக்கியா ஜி 50 அறிமுகத்துடன் குறைந்த விலை 5 ஜி போன்களை உள்ளடக்கியதாக மாற்றப்பட்டது.
இதன் சிங்கிள் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.15,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சிங்கிள் Meteor Grey வண்ண விருப்பத்தில் மட்டுமே வாங்க கிடைக்கும்.
இது வருகிற அக்டோபர் 19 முதல் அமெரிக்காவில் வாங்குவதற்கு கிடைக்கும். நோக்கியா ஜி 300 ஸ்மார்ட்போனின் உலகளாவிய விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
– ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
– 6.52 இன்ச் எச்டி+ (720×1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
– 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ
– ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 SoC
– 4 ஜிபி ரேம்
– ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
– 16 மெகாபிக்சல் மெயின் சென்சார் (f/1.8)
– 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர்
– 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
– 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
– மைக்ரோ எஸ்டி கார்டு (1 டிபி வரை) வழியாக விரிவாக்கும் ஆதரவு
– 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
– 5ஜி, 4G LTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் v5, GPS/ A-GPS, NFC, யூஎஸ்பி டைப்-சி
-3.5mm ஹெட்ஜாக்
– பவர் பட்டனுக்குள் உட்புறமாக "பதிக்கப்பட்ட" கைரேகை சென்சார்
– 4,470 எம்ஏஎச் பேட்டரி
– 18W பாஸ்ட் சார்ஜிங்
– குவால்காமின் பாஸ்ட் சார்ஜ் 3.0 உடன் இணக்கமானது
– அளவீட்டில் 169.41×78.43×9.28 மிமீ.
நோக்கியா G300 வீடியோக்களுக்கான இடஞ்சார்ந்த ஆடியோ அனுபவத்தைக் கொண்டுவருவதாகக் கூறப்படும் OZO ஆடியோ ஆதரவையும் கொண்டுள்ளது. இது ஒரு பிரத்யேக நைட் மோட் மற்றும் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) உள்ளிட்ட அம்சங்களுடன் ப்ரீ லோலட் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த தலைமுறை செல்லுலார் இணைப்பிற்காக (5ஜி), நோக்கியா G300 ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 SoC-ஐ கொண்டுள்ளது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போன் 18W பாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.