Realme-Xiaomi உடன் மோதும் விதமாக Nokia C20 Plus குறைந்த விலையில் அறிமுகமானது.

HIGHLIGHTS

Nokia C20 Plus என்பது HMD யின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆகும்.

Nokia C20 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்

Nokia C20 Plus ஸ்மார்ட்போன் ஓசன் புளூ மற்றும் கிராபைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது

Realme-Xiaomi  உடன் மோதும் விதமாக  Nokia C20 Plus குறைந்த விலையில் அறிமுகமானது.

Nokia C20 Plus என்பது HMD யின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆகும். புதியC20 Plus  (நோக்கியா சி 20 பிளஸ்) என்பது நோக்கியா C20  இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும், இது ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் சில காரணங்களால் நிறுவனம் அதை இந்தியாவிற்கு கொண்டு வர முடியவில்லை, அதாவது இது நோக்கியாவால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நோக்கியா சி 20 பிளஸ் நிறுவனத்தின் புதிய என்ட்ரி நிலை ஸ்மார்ட்போன், இந்த மொபைல் போனில் நீங்கள் வழக்கமான புதுப்பிப்புகளுடன் சுத்தமான ஆண்ட்ராய்டு சாப்ட்வெர் வழங்கும்..

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 நோக்கியா சி20 பிளஸ் விலை தகவல்.

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் ஓசன் புளூ மற்றும் கிராபைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 8,999 என்றும் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 9,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா சி20 பிளஸ் அம்சங்கள்

– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
– 1.6GHz ஆக்டா-கோர் யுனிசாக் SC9863A பிராசஸர்
– IMG8322 GPU
– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன்
– டூயல் சிம்
– 8 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 5 எம்பி செல்பி கேமரா
– 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
– 4950 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD பிளஸ் ஸ்கிரீன், யுனிசாக் SC9863A பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் கொண்டுள்ளது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. புதிய நோக்கியா சி20 பிளஸ் 4950 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile