நோக்கியா சி2 2வது எடிசன் , நோக்கியா சி21 மற்றும் நோக்கியா சி21 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று போன்களும் இந்நிறுவனத்தின் பட்ஜெட் மாடல்களாகும். ஒரு பயனர் ஃபீச்சர் ஃபோனில் இருந்து மேம்படுத்த விரும்பினால், இந்த ஃபோன்கள் அவர்களுக்கு நல்லதாக இருக்கும். நோக்கியா சி21 பிளஸில் டூயல் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நோக்கியா சி2 2வது எடிஷன் மற்றும் வழக்கமான நோக்கியா சி21 ஆகியவை ஒற்றை பின்புற கேமராவைக் கொண்டுள்ளன. எனவே அவற்றின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை அறிந்து கொள்வோம்.
இதில் நோக்கியா சி2 2-வது எடிஷன் போனில் 5.7-inch FWVGA டிஸ்பிளே, quad-core MediaTek SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5 மெகாபிக்ஸல் ஃபிக்ஸ்ட் ஃபோகஸ் லென்ஸ் பின்பக்க கேமரா, எல்.இ.டி பிளாஷ், 2 எம்.பி செல்ஃபி கேமரா, 2400mAh பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.6,700-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா சி21 போனில் octa-core Unisoc SC9863A SoC பிராசஸர், 2ஜிபி/3ஜிபி ரேம், 6.5-inch HD+ display, 8 மெகாபிக்ஸல் பின்பக்க கேமரா, 5 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, 3000 mAh பேட்டரி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 8,400-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா சி21 பிளஸ் போனில் 6.5-inch HD+ டிஸ்பிளே, octa-core Unisoc SC9863A பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 13 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் எல்.இ.டி ஃபிளாஷுடன் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா சென்சார், 4000 mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.10,100-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.