HMD குளோபல் நிறுவனம் நோக்கியா 8120 4ஜி மொபைல் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக நோக்கியா 2660 ப்ளிப் மற்றும் 5710 எக்ஸ்பிரஸ் ரேடியோ போன்ற மாடல்களுடன் நோக்கியா 8120 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
Survey
✅ Thank you for completing the survey!
புது நோக்கியா 8120 அதன் பழைய ஃபீச்சர் போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அசத்தல் டிசைன், தலைசிறந்த உறுதித்தன்மை கொண்டிருக்கும் நோக்கியா 8120 மாடல் 4ஜி, வோல்ட்இ கனெக்டிவிட்டி, 2.8 இன்ச் டிஸ்ப்ளே, எளிய யூசர் இண்டர்பேஸ் கொண்டுள்ளது.
இத்துடன் டார்ச், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர், கேம்லாஃப்ட் கேம்கள், ஒரிஜின் டேட்டா கேம்கள் பிரீலோட் செய்யப்பட்டு உள்ளன.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா 8120 4ஜி மாடல் டார்க் புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் நோக்கியா இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile