டிசம்பர் 5 ஆம் தேதி , நோக்கியாவின் புதிய PHONE, 64MP குவாட் மற்றும் பாப்-அப் செல்பி கேமராவுடன் அறிமுகமாகும்.
HMD குளோபல் நிறுவனம் டிசம்பர் 5 ஆம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
HMD குளோபல் நிறுவனம் டிசம்பர் 5 ஆம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் டீசர் மூலம் அறிவித்துள்ளது.
Surveyஇந்த ஆண்டு HMD, குளோபல் நிறுவனம் நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனில் சிறிய வாட்டர் டிராப் நாட்ச், FHD+HDR10 பியூர்டிஸ்ப்ளே, மேம்பட்ட பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ் வழங்கப்படலாம்.
The newest addition to our family will be launched on 5 December 2019. Stay tuned to find out more! #NokiamobileLive pic.twitter.com/iYqPxyOTKP
— Nokia Mobile (@NokiaMobile) 22 November 2019
புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு நிகழ்வு எகிப்து நாட்டின் கைரோவில் நடைபெற இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு இதே தேதியில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. சமீபத்தில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டது.
இத்துடன் வேகமான ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், நோக்கியா 8.1 மாடலில் வழங்கப்பட்டதை விட அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படலாம்.
இதிலும் முந்தைய மாடலில் வழங்கப்பட்டுள்ளதை விட வேகமான பிராசஸர், பெரிய பேட்டரி, மேம்பட்ட கேமரா, சிறிய HD+ ஸ்கிரீன் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகிறது.நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
