நோக்கியா பிரியர்களுக்கு சந்தோசமான செய்தி, 20 ஆண்டுகளுக்கு பிறகு Nokia 6310 அறிமுகம்

நோக்கியா   பிரியர்களுக்கு சந்தோசமான செய்தி, 20 ஆண்டுகளுக்கு பிறகு Nokia 6310 அறிமுகம்
HIGHLIGHTS

பிரபலமான கிளாசிக் Nokia 6310 ஐ வெளியிட்டுள்ளது

புதிய நோக்கியா 6310 இல் சில மோர்டர்ன் மாற்றங்களைச் செய்துள்ளது

நோக்கியா 6310 ஐரோப்பாவில் விற்பனைக்கு கிடைத்துள்ளது

HMD Global சில ஆண்டுகளுக்கு முன்பு Nokia பிராண்ட் லைசென்ஸ் வாங்கியது. அப்போதிருந்து, நிறுவனம் தொடர்ந்து புதிய அவதாரங்களில் கிளாசிக் நோக்கியா வகையான போன்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது, ​​நிறுவனம் நவீன வகைகளுடன் மிகவும் பிரபலமான கிளாசிக் Nokia 6310 ஐ வெளியிட்டுள்ளது. 2021 எடிஷன் புதிய அலிகாண்ட் மற்றும் பழக்கமான புதிய போடி உடன் வருகிறது.

கம்பெனி புதிய நோக்கியா 6310 இல் சில மோர்டர்ன் மாற்றங்களைச் செய்துள்ளது, ஆனால் 2001 இல் வந்த அசல் போனில் கேண்டி பார் டிசைன் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பழைய போன் ஸ்பீக்கர் வடிவமைப்பு வித்தியாசமாக வழங்கப்பட்டாலும், புதிய பதிப்பில் இயர்பீஸுக்கு எளிய கிடைமட்ட பிளவு உள்ளது. ஒரே கலர் கொண்ட  6-லைன் டிஸ்ப்ளே பதிலாக, புதிய நோக்கியா 6310 ஒரு கவர்ட் கலர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது முன்பை விட பெரியது 

புதிய நோக்கியா 6310 ஐரோப்பாவில் விற்பனைக்கு கிடைத்துள்ளது. மேலும் இதை நோக்கியா மொபைல்கள் ஆபீசியால் வெப்சைட் €59.90  (சுமார் ரூ .5,300) க்கு எடுக்கலாம். மற்ற சந்தைகளில் அறிமுகம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Nokia 6310 (2021): ஸ்பெசிபிகேஷன் 

ஸ்பெசிபிகேஷன் பற்றி பேசுகையில், நோக்கியா 6310 2.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. போனில் UNISOC 6531F ப்ரோசிஸோர், 8MB ரேம் மற்றும் 16MB இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது.போன் Series 30+ (S30+ ஒபெரடிங் சிஸ்டம் வருகிறது. ஹேண்ட்செட் உள்ள ஐகான்கள் முன்பை விட பெரியது மற்றும் மெனுக்கள் ஜூம் மற்றும் பயன்பாட்டின் எளிமையாக பெரிய தாக்கப்பட்டுள்ளன. போனில் அணுகல் பயன் முறையும் உள்ளது, இது மெனுவை மிகவும் எளிதாக்குகிறது.

நோக்கியா 6310 இல் 0.3 மெகாபிக்சல் ரியர் கேமரா உள்ளது, இது எல்இடி ப்ளாஷ் உடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போனில் கிடைக்கிறது மற்றும் யூசர் 32 ஜிபி வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மொபைல் புளூடூத் 5.0, வைஃபை, டூயல் சிம் ஆதரவு மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற பியூச்சர் வழங்கப்பட்டுள்ளன.

போனில் 150mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது, இது 2001 மாடலை விட சற்று பெரியது. ஆனால் இது 7 மணி நேரத்திற்கும் மேலான டாக் டைம் வழங்கும் என்றும் பல வாரங்கள் காத்திருப்பு நேரத்தை வழங்க முடியும் என்றும் நோக்கியா கூறுகிறது. போனிலிருந்து பேட்டரியை அகற்றலாம். சார்ஜர் மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி கேபிள் போனுடன் பெட்டியில் கிடைக்கின்றன.

நோக்கியா வெளியிட்டுள்ள வீடியோவில், நோக்கியா 6310 ஐ மூன்று கலர்கலில் காணலாம். ஆனால் கருப்பு மற்றும் அடர் பச்சை நிறம் மட்டுமே பயனர்களுக்கு விற்பனைக்கு கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo