நோக்கியாவின் பில்ட் இன் இயர்பட்ஸ் அம்சத்துடன் Nokia 5710 XpressAudio பீச்சர் போன் அறிமுகம்..

HIGHLIGHTS

நோக்கியா தனது புதிய ஸ்மார்ட்போனான நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

நோக்கியா 5710 XpressAudio 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது

XpressAudio 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது

நோக்கியா தனது புதிய ஸ்மார்ட்போனான நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Nokia 5710 XpressAudio ஆனது உள்ளமைக்கப்பட்ட வயர்லெஸ் இயர்போன் கொடுக்கப்பட்ட அத்தகைய ஃபோன்களில் ஒன்றாகும். நோக்கியா 5710 XpressAudio 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதுதவிர Unisoc T107 செயலி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் மியூசிக் கன்ட்ரோலுக்கான தனி பட்டனும் உள்ளது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ போனின் விலை ரூ. 4 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை செப்டம்பர் 19 ஆம் தேதி முன்னணி சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது.

Nokia 5710 XpressAudio சிறப்பம்சம்.

நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ போன் நோக்கியா 8210 4ஜி மற்றும் நோக்கியா 2660 ப்ளிப் போன் மாடல்களுடன் ஜூலை மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ போன் நோக்கியா 5310 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் பெரிய பேட்டரி, பிரத்யேக ஆடியோ கண்ட்ரோல் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த போன் அதிநவீன பயனர்களின் இசை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இயர்பட்ஸ்-ஐ பயன்படுத்தாத சமயத்தில் அவற்றை போனின் பின்புறம் இருக்கும் ஸ்லைடரின் கீழ் வைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள இரு ஸ்பீக்கர்கள் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதனுடன் வழங்கப்படும் இயர்போன்களை மற்ற ஸ்மார்ட்போன்களுடனும் இணைத்து பயன்படுத்தலாம்.

நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ மாடலில் 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வரும் இயர்பட்ஸ்-இல் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பீச்சர் போன் நீண்ட கால பயன்பாட்டுக்கு உகந்ததை உறுதிப்படுத்தும் வகையில் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது[/

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :