5 கேமரா கொண்ட Nokia 5.4 இன்று அசத்தல் ஆபர் உடன் விற்பனை

Updated on 17-Feb-2021
HIGHLIGHTS

நோக்கியாவின் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் நோக்கியா 5.4 இன்று விற்பனைக்கு வருகிறது

Nokia 5.4 விற்பனை பிளிப்கார்ட்டில் மதியம் 12 மணி முதல் தொடங்கும்

ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டிலிருந்து போனை வாங்கும்போது பயனர்களுக்கு 5 சதவீதம் அன்லிமிட்டட் கேஷ்பேக் கிடைக்கும்

நோக்கியாவின் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் நோக்கியா 5.4 இன்று விற்பனைக்கு வருகிறது. ரூ .13,999 ஆரம்ப விலையில் வரும் இந்த போனின் விற்பனை பிளிப்கார்ட்டில் மதியம் 12 மணி முதல் தொடங்கும். 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த தொலைபேசியை இன்று பல கவர்ச்சிகரமான சலுகைகளுடன் வாங்கலாம்.

இந்த விற்பனையில் உள்ள பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டிலிருந்து போனை வாங்கும்போது பயனர்களுக்கு 5 சதவீதம் அன்லிமிட்டட்  கேஷ்பேக் கிடைக்கும். இது தவிர, மாதத்திற்கு ரூ .2,584 நோ கோஸ்ட் EMI  யிலும் போனை வாங்கலாம். சிறப்பு என்னவென்றால், எக்ஸ்சேஞ்ச் சலுகையில் போனை வாங்குவதன் மூலம், உங்களுக்கு ரூ .14,850 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்..

Nokia  5.4 சிறப்பம்சம்

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தத, நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. போட்டோ  எடுக்க 16 எம்பி செல்பி கேமரா, 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ சென்சார் உள்ளன.

இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி,  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 5.4 மாடலில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :