வாங்கிய 5 நாட்களில் OnePlus Nord 2 5G வெடித்து சிதறியது.

HIGHLIGHTS

OnePlus Nord 2 5G இது நிறுவனத்தின் நோர்ட் தொடரின் மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆகும்.

வாங்கிய ஐந்து நாட்களுக்குப் பிறகு ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி வெடித்ததாகக் கூறப்படுகிறது.

நார்டு 2 வெளிப்புற காரணிகளால் தான் வெடித்து சிதறியது என எங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது."

வாங்கிய 5 நாட்களில்  OnePlus Nord 2 5G வெடித்து சிதறியது.

OnePlus Nord 2 5G இது நிறுவனத்தின் நோர்ட் தொடரின் மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆகும். ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், தொலைபேசியுடன் ஒரு சர்ச்சை தொடர்புடையது. வாங்கிய ஐந்து நாட்களுக்குப் பிறகு ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி வெடித்ததாகக் கூறப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஒன்பிளஸ் பயனர் ஒருவர் தனது மனைவியின் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக தனது ட்விட்டரில் பதிவிட்டார். தனது பதிவில் வெடித்து சிதறியதால் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் தெளிவாக தெரியும் படி புகைப்படங்களையும் அவர் இணைத்து இருந்தார். பயனர் குற்றச்சாட்டுக்கு ஒன்பிளஸ் பதில் அளித்துள்ளது.

"வெடித்து சிதறிய நார்டு 2 ஸ்மார்ட்போனினை முழுமையாக ஆய்வு செய்தோம். அந்த மாடலில் எந்த விதமான உற்பத்தி கோளாறும் ஏற்படவில்லை. நார்டு 2 வெளிப்புற காரணிகளால் தான் வெடித்து சிதறியது என எங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது."

"குற்றம்சாட்டிய பயனருடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறோம். வாடிக்கையாளரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே எங்களின் ஒரே நோக்கம் ஆகும். பயனரின் குறைகளை தீர்ப்பது மற்றும் நன்னிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் சிறந்த சேவையை வழங்கி இருக்கிறோம்," என தெரிவித்து இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile