Motorola Razr 2 ஸ்னாப்டிராகன் 765, ப்ரோசெசர் உடன் வரும், இணையத்தில் லீக்.

Motorola Razr  2 ஸ்னாப்டிராகன் 765, ப்ரோசெசர்  உடன் வரும், இணையத்தில் லீக்.
HIGHLIGHTS

2020 ரேசர் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது

மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ரேசர் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ஒடிசி எனும் குறியீட்டு பெயரில் உருவாகி இருக்கும் மோட்டோ ரேசர் 2 தோற்றத்தில் முந்தைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

புதிய மோட்டோரோலா ரேசர் மாடல் எக்ஸ்டி2071-4 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

மோட்டோரோலாவின் முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான ரேசர் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. வடிவமைப்பில் கோளாறுகள் நிறைந்து இருந்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், இதே வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து புதிய ரேசர் 2 மாடலை வெளியிட மோட்டோரோலா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

முந்தைய மாடலின் கேமரா சிறப்பானதாக இல்லை என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், புதிய ரேசர் 2 மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 ஒஸ் வழங்கப்படும் என்றும் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே குவிக் வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo