Motorola Razr போல்டப்பில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு

Motorola Razr  போல்டப்பில் ஸ்மார்ட்போன்களுக்கு  அதிரடி  விலை குறைப்பு
HIGHLIGHTS

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் 2019 முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இரு ஸ்மார்ட்போன்களுக்கான விலை குறைப்பு முன்பை போன்றே குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோரோலா ரேசர் 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 89,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது

மோட்டோரோலா நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் 2019 முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மோட்டோரோலா ரேசர் 4ஜி மற்றும் ரேசர் 5ஜி என இரு மடிக்கக்கூடிய மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

இரு ஸ்மார்ட்போன்களுக்கான விலை குறைப்பு முன்பை போன்றே குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை குறைப்பு ப்ளிப்கார்ட் தளத்திற்கு மட்டும் பொருந்தும்.

விலை குறைப்பின் படி மோட்டோரோலா ரேசர் 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 89,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 1,24,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மோட்டோரோலா ரேசர் 4ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 54,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் முந்தைய விலை ரூ. 1,49,999 ஆகும்.

மோட்டோ ரேசர் 5ஜி மாடல் பாலிஷ் கிராபைட் நிறத்தில் கிடைக்கிறது. மோட்டோ ரேசர் 4ஜி மாடல் நாய்ர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சமாக 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo