புதிய போன் வருகையால் Motorola யின் இந்த பழைய போனில் அதிரடி குறைப்பு
Motorola Razr 60 Ultra நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
கடந்த ஜெனரேசன் மாடலான Razr 50 Ultra போனின் விலை அதிரடியாக ப்ளிப்கார்ட்டில் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த போனை வெறும் ரூ,65,100க்கு வாங்கலாம்
Motorola Razr 60 Ultra நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து அதன் கடந்த ஜெனரேசன் மாடலான Razr 50 Ultra போனின் விலை அதிரடியாக ப்ளிப்கார்ட்டில் குறைக்கப்பட்டுள்ளது. அதவது இந்த போனை வெறும் ரூ,65,100க்கு வாங்கலாம் இந்த போன் கடந்த ஆண்டு ரூ,99,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் நீங்கள் ஒரு பிலிப் போன் வாங்கி பந்தா காட்ட நினைத்தால் இந்த மிக சிறந்த டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்.
SurveyMotorola Razr 50 Ultra ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை
மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா தற்போது வெறும் ரூ.68,549க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது – அதன் அறிமுக விலையில் ரூ.31,450 குறைவு. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டில் ரூ.3,423 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுவது இதை இன்னும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.
மேலும், வாங்குபவர்கள் மாதத்திற்கு ரூ.2,410 முதல் தொடங்கும் மாதாந்திர EMI-யையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Motorola Razr 50 Ultra சிறப்பம்சம்.
மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா, HDR10+ உடன் கூடிய மாட்டி 4-இன்ச் LTPO AMOLED கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, 10-பிட் கலர் , 165Hz வரை ரெப்ராஸ் ரேட் மற்றும் 2400 nits ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது. விரிக்கும்போது, இந்த போனில் 165Hz வரை ரெப்ராஸ் ரெட்டுடன் 6.9-இன்ச் உள் டிஸ்ப்ளேவாக விரிவடைகிறது. பர்போமன்சுக்காக, இந்த போன் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது.
இதையும் படிங்க Motorola Razr 60 போன் இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
ஒளியியல் அடிப்படையில், Razr 50 Ultra இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50MP பிரதான கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவை அடங்கும். மேலும், இந்த போன் 45W வேகமான சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் 4000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile