Motorola One Hyper பாப்-அப் செல்பி கேமரா உடன் டிசம்பர் 3 தேதி அறிமுகமாகும்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 28 Nov 2019
Motorola One Hyper பாப்-அப் செல்பி கேமரா  உடன் டிசம்பர் 3 தேதி அறிமுகமாகும்.
HIGHLIGHTS

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் டிசம்பர் 3-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது

பாப் அப் செல்ஃபி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது

Advertisements

IBM Developer Contest

Take the quiz to test your coding skills and stand a chance to win exciting vouchers and prizes upto Rs.10000

Click here to know more

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் டிசம்பர் 3-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பாப் அப் செல்ஃபி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை டீசர் மூலம் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. வலைத்தளத்தில் XT2027-1 எனும் மாடல் நம்பருடன் காணப்பட்டது. இதில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் 6.69 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் என்.எஃப்.சி. வசதி கொண்டிருக்காது என கூறப்பட்டிருந்தது.

புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விவோ வி15 ப்ரோ, ரியல்மி எக்ஸ், ரெட்மி கே20 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க பின்புறம் 64 எம்.பி. பிரைமரி சென்சாருடன், 8 எம்.பி. இண்டாவது சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, F/2.0 லென்ஸ் வழங்கப்படலாம். மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் பிராண்டிங் கொண்டிருக்கும் என்றும் இதில் ஆண்ட்ராய்டு 10 வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வழங்கப்படலாம்.

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status