கணக்கில்லாமல் போனை இறக்கும் Motorola, சத்தமில்லாமல் Moto g37 சீரிஸ் அறிமுகம்

Motorola இன்று சத்தமில்லாமல் அதன் moto g37 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த சீரிஸின் கீழ் moto g37 மற்றும் g37 Power ஆகிய இரண்டு போனை கொண்டு வந்துள்ளது இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கூடிய 6.7-இன்ச் HD+ LCD ஸ்க்ரீன் , மீடியாடெக் டைமென்சிட்டி 6400 SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த போனில் இருக்கும் விலை மற்றும் அம்சங்கள் பாற்றி பார்க்கலாம் வாங்க.

Moto G37 மற்றும் Moto G37 Power சிறப்பம்சம்

Moto G37 மற்றும் G37 Power ஆகிய மாடல்கள் 120Hz ரிபெரேஸ் ரெட்டுடன் கூடிய 6.6- இன்ச் HD+ LCD டிஸ்பிலே கொண்டுள்ளன. இந்த விலை ரேன்ஜில் இத்தகைய மிகச் சீரான டிஸ்பிலேவை வழங்குவது தனியொரு டிவைஸகவே கருதப்படுகிறது. இதில் Corning Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளதால் டிஸ்பிலே கூடுதல் உறுதியுடன் திகழ்கிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே MediaTek Dimensity 6400 சிப்செட் உடன் வருகின்றன. இந்த விலை ரேன்ஜில் 5G பேர்போர்மன்சுக்கு ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. சாப்ட்வேர் பொறுத்தவரை இந்த இரண்டு டிவைஸ்களும் Android 16 இயங்குதளத்தில் இயங்குகின்றன. அவற்றுக்குச் சமீபத்திய பீச்சர்களை அப்டேட் செய்யப்பட்டி செக்யூரிட்டி அப்டெட்களையும் வழங்குகிறது.

இந்த இரண்டு மொபைல்களிலும் உள்ள கேமரா செட்டிங் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே உள்ளது. பின்புறம் PDAF சப்போர்டுடன் கூடிய 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்குத் துணையாக, லைட் மற்றும் பிலிக்கர் கண்டறியும் பணியைச் செய்யும் ஒரு துணை சென்சார் உள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா ஒன்று உள்ளது. செல்பிகள் மற்றும் வீடியோ கால்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.

இப்போது உண்மையான வித்தியாசம் பேட்டரி பர்போமான்ஸ் ஏன்என்றால், Moto G37 மாடலானது 20W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது 5,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஆனால், Moto G37 Power மாடலானது 30W பாஸ்ட் சார்ஜிங் பிச்சருடன் கூடிய சிறப்பான 7,000mAh பேட்டரியைக் கொண்டிருப்பதால் இந்த விஷயத்தில் வெகுவாக முன்னிலை வகிக்கிறது. ஒரே முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்தத் மொபைல் 2 முதல் 3 நாட்கள் வரை நீடித்து உழைக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்த மொபைலை அதிக அளவில் பயன்படுத்தும் யுசர்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்மையாகும்.

ஸ்டோரேஜ் மற்றும் RAM பொறுத்தவரை Moto G37 மாடலானது 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜை கொண்டுள்ளது. அதேவேளையில், G37 Power மாடலானது 8GB வரையிலான RAM மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை வழங்குகிறது. இந்த இரண்டு மொபைல்களிலும் RAM Boost பீச்சர் வாயிலாக விர்ஜுவல் RAM 12GB வரை அதிகரிக்க முடியும் மற்றும் microSD கார்டு பயன்படுத்தி ஸ்டோரேஜை 1TB வரை அதிகரிக்கலாம் .

டிசைன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தவரை இந்த இரண்டு மொபைல்களும் IP64 ரேட்டிங் பெற்றுள்ளன. லேசான டஸ்ட் மற்றும் வாட்டரிளிருந்து பாதுகாக்கப்படும் திறன் கொண்டவை. இவை MIL-STD-810H செர்டிபிகேட் கொண்டுள்ளதால் மிகுந்த நீடித்து உழைக்கும் தன்மையுடன் விளங்குகின்றன. செப்டிற்காக இவற்றில் சைடு மௌன்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

கணெக்ட்டிவிட்டி பொறுத்தவரை இந்த இரண்டு மொபைல்களும் 5G, 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.4 மற்றும் USB Type-C போன்ற பீச்சர்கள் இடம்பெற்றுள்ளன. 3.5mm கொண்ட ஹெட்போன் ஜாக்கும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அரிதாகி வரும் ஒரு சிறப்பம்சமாகும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :