48MP கேமராவுடன் Moto G8 Plus ரூ. 13,999 யின் விலையில் அறிமுகம்.

HIGHLIGHTS

48MP  கேமராவுடன் Moto G8 Plus ரூ. 13,999 யின் விலையில் அறிமுகம்.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD  பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.இந்த போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. போனில் 16 எம்.பி குவாட் பிக்சல் அதிரடி கேமராவும் உள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை 

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் காஸ்மிக் புளு மற்றும் க்ரிஸ்டல் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் மாத இறுதியில் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது. 
மோட்டோ ஜி8 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 1080×2280 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 4 ஜி.பி. LPDDR4x ரேம்
– 64 ஜி.பி. eMMC 5.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 48 எம்.பி. குவாட் பிக்சல் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79,0. 8um பிக்சல், PDAF
– 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆக்‌ஷன் கேமரா, 2.0um குவாட் பிக்சல், f/2.2
– 5 எம்.பி. டெப்த் சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ்
– 25 எம்.பி. குவாட் பிக்சல் செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ
– எஃப்.எம். ரேடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX2)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah பேட்டரி
– 15 வாட் டர்போ சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, 16 எம்.பி. ஆக்‌ஷன் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ், 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிளாஸ்டிக் பேக், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், பின்புறம் கைரேகை சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் 4000 Mah ச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile