வேற லெவல்யா இது, Motorola யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,15,300 குறைப்பு கம்மி விலையில் தூக்க சரியான நேரம்

HIGHLIGHTS

MOTOROLA g37 power போனை இப்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்.

இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் அதன் ஒரிஜினல் விலையை விட பாதி விலைக்கு வாங்கலாம்

உங்கள் பட்ஜெட் ஒரு 15000ரூபாய் என்றால் இது மிக சிறந்த ஆப்சனாக இருக்கும்

வேற லெவல்யா இது, Motorola யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,15,300 குறைப்பு கம்மி விலையில் தூக்க சரியான நேரம்

நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இப்பொழுது MOTOROLA g37 power போனை இப்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம். ஆம் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் அதன் ஒரிஜினல் விலையை விட பாதி விலைக்கு வாங்கலாம், மேலும் உங்கள் பட்ஜெட் ஒரு 15000ரூபாய் என்றால் இது மிக சிறந்த ஆப்சனாக இருக்கும் மேலும் இந்த போனில் Dimensity 6400 போன்ற பவர்புல் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA g37 power ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

MOTOROLA g37 power போனை பிளிப்கார்டில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,800 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,15,199க்கு வாங்கலாம், இதை தவிர நீங்கள் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இந்த போனை வெறும் ரூ,13,400க்கு வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,30,499 ஆகும் அதிலிருந்து நேரடியாக ரூ,15,300 கோரைக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம்.

MOTOROLA g37 power சிறப்பம்சம்.

MOTOROLA g37 power, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் கூடிய 6.7-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 6400 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இதில் 8GB வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்ககூடிய சப்போர்ட் இருக்கிறது . இது ஹலோ UI உடன் ஆண்ட்ராய்டு 16-ல் இயங்குகிறது, மேலும் ஆண்ட்ராய்டு 17 மற்றும் மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்களைப் பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க புது போன் வாங்க போறிங்களா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Samsung கொண்டு வருது புதிய போன்

இந்தக் போனில் 50MP குவாட் பிக்சல் பின்புற கேமரா மற்றும் 8MP முன்புற கேமராவுடன், மேஜிக் எரேசர் மற்றும் போட்டோ அன்ப்ளர் போன்ற செயற்கை நுண்ணறிவு ஆதரவுடைய எடிட்டிங் கருவிகளும் உள்ளன. இதில் 7,000mAh பேட்டரி, 33W வயர்டு சார்ஜிங் மற்றும் 6W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile