Motorola Razr போல்டப்பில் போன் இந்த மாதுரி இருக்குமாம் லீக் வெளியாகியுள்ளது.

Motorola Razr போல்டப்பில்  போன் இந்த மாதுரி  இருக்குமாம்  லீக் வெளியாகியுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய சாதனங்கள் நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புகைப்படங்களின் படி புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேக்கள் ஒரே இடத்தில் ஃப்ளிப் ஆகும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படங்களில் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் பார்க்க 2004 ஆம் ஆண்டு வெளியான மோட்டோ ரேசர் வி3 போன்று காட்சியளிக்கிறது.

ஸ்மார்ட்போன் புகைப்படங்களைத் தொடர்ந்து ரேசர் லோகோ படமும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனின் மேல்புறம் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கீழ்புறத்தை திறக்கும் போது பெரிய திரை மற்றும் ஹின்ஜ் உள்ளிட்டவை தெரியும் என கூறப்பட்டது.

இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறம் பட்டன் ஒன்று காணப்படுகிறது. இதிலேயே கைரேகை சென்சாரும் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா சென்சார் காணப்படுகிறது. புதிய புகைப்படங்களில் ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், வரும் நாட்களில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile