Install App Install App

108 Mp கேமராவுடன் Motorola Edge 20 மற்றும் Edge 20 Fusion அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 20 Aug 2021
HIGHLIGHTS
  • மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

  • மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன்கள் 108 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் வருகின்றன

  • மோட்டோ எட்ஜ் 20 நாட்டின் மிக மெல்லிய மற்றும் இலகுவான 5 ஜி ஸ்மார்ட்போன் என்று நிறுவனம் கூறுகிறது.

108 Mp  கேமராவுடன் Motorola Edge 20 மற்றும் Edge 20 Fusion அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்.
108 Mp கேமராவுடன் Motorola Edge 20 மற்றும் Edge 20 Fusion அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்.

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன்கள் 108 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் வருகின்றன. இவற்றில், 5G ஆதரவு கிடைக்கிறது மற்றும் 10-பிட் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டோ எட்ஜ் 20 நாட்டின் மிக மெல்லிய மற்றும் இலகுவான 5 ஜி ஸ்மார்ட்போன் என்று நிறுவனம் கூறுகிறது.

Motorola Edge 20 மற்றும் Edge 20 Fusion சிறப்பம்சம் 

இரு மாடல்களிலும் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், எட்ஜ் 20 மாடலில் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது.
 
மோட்டோரோலா எட்ஜ் 20 மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸரும், எட்ஜ் 20 பியூஷன் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸரும் வழங்கப்பட்டு இருக்கிறது. 

 மோட்டோரோலா எட்ஜ் 20 

புகைப்படங்களை எடுக்க இரு மாடல்களிலும் 108 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 2 எம்பி டெப்த் சென்சார், எட்ஜ் 20 மாடலில் 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

இரு மாடல்களிலும் 5ஜி கனெக்டிவிட்டிக்கு பல்வேறு பேண்ட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ எட்ஜ் 20 மாடல் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மோட்டோ எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் சைபர் டீல் மற்றும் எலெக்ட்ரிக் கிராபைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,499 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 22,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 மாடல் பிராஸ்டெட் எமரால்டு மற்றும் பிராஸ்டெட் பியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 29,999 ஆகும். இதன் விற்பனை ஆகஸ்ட் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி விற்பனை மையங்களில் துவங்குகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Motorola Edge 20 and Motorola edge fusion launched in india know here all details
Tags:
motorola edge 20 series launched in india Motorola Edge 20 Price motorola edge 20 fusion price in india Motorola Edge 20 edge 20 fusion price launch Motorola Moto Edge 20 Price launch specs
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
₹ 29990 | $hotDeals->merchant_name
OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
₹ 39999 | $hotDeals->merchant_name
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
₹ 26990 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
₹ 24999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status