மோட்டோரோலா மோட்டோ P30 ஸ்மார்ட்போன் அறிமுகம்…!

Updated on 19-Aug-2018
HIGHLIGHTS

சீனாவில் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ P30 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்,கொண்டுள்ளது.

மோட்டோரோலாவின் மோட்டோ P30 ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ P30 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் ZUI 4.0 கொண்டுள்ளது.

கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் டிசைன் கொண்டிருக்கும் மோட்டோ P30 ஸ்மார்ட்போனில் லெனோவோ இசட்5 போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்பக்கம் கார்னிங் கொபரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, 1.25μm பிக்சல், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. சப்போர்ட் மற்றும் செல்ஃபிக்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சம், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது.

மோட்டோ P30 சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5 வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
–  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ZUI 4.0
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.25μm பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.25μm பிக்சல்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோ P30 ஸ்மார்ட்போன் வைட், பிளாக் மற்றும் அரோரா புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 2099 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.21,315) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 128 ஜிபி வெர்ஷன் 2499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.25,380) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :