Microsoft யின் போல்டப்பில் ஸ்மார்ட்போன் Surface Duo 2 அறிமுகம்.

HIGHLIGHTS

Samsung மற்றும் Motorola உடன் மோதும் விதமாக மைக்ரோசாப்ட் அதன் போல்டப்பில் அறிமுகப்படுத்தியது

அதன் பெயர் Surface Duo 2 ஆகும்

மூன்று கேமராக்களும் கொடுக்கப்பட்டுள்ளன

Microsoft  யின் போல்டப்பில்  ஸ்மார்ட்போன் Surface Duo 2 அறிமுகம்.

Samsung மற்றும் Motorola உடன் மோதும் விதமாக மைக்ரோசாப்ட் அதன் போல்டப்பில் அறிமுகப்படுத்தியது  அதன்  பெயர் Surface Duo  2. இந்த போன் பல சக்திவாய்ந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அவற்றில் ஒன்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 செயலி. இதுமட்டுமின்றி, நிறுவனம் போனுடன் இரண்டு போல்டப்பில் ஸ்க்ரீன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், மூன்று கேமராக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் டியோ 2 விலை மற்றும் அம்சங்களின் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மைக்ரோசாப்ட்  Surface Duo 2 விலை தகவல் 

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 மாடல் கிளேசியர் மற்றும் அப்சிடியன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜிபி விலை 1499.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,10,675 என்றும் 256 ஜிபி விலை 1599.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,18,050 என்றும் 512 ஜிபி விலை 1799.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,32,810 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 அம்சங்கள்

– 5.8 இன்ச் 1344×1892 பிக்சல் அமோலெட் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
– அட்ரினோ 660 ஜி.பி.யு.
– 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 11 
– ஒரு இ-சிம், ஒரு நானோ சிம் 
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 12 எம்பி பிரைமரி கேமரா, ஓ.ஐ.எஸ். டூயல் எல்.இ.டி. பிளாஷ்
– 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
– 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, ஓ.ஐ.எஸ்.
– 12 எம்பி செல்பி கேமரா
– யு.எஸ்.பி டைப் சி ஆடியோ
– 5ஜி எஸ்.ஏ./என்.எஸ்.ஏ., 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.1
– 4449 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 23 வாட் பாஸ்ட் சார்ஜிங்

புதிய ஸ்மார்ட்போன் இரண்டு 5.8 இன்ச் பிக்சல் சென்ஸ் பியூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் திறந்த நிலையில் 8.3 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. 

இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மைக்ரோசாப்ட் 365 மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைகளுக்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஆடியோ, என்.எப்.சி. போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

கேமரா செக்மன்ட் பற்றி பேசினால் இந்த போனில் ட்ரிப்பில் பின் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரைமரி கேமரா 12MP வைட் என்கில் லென்ஸ் கொண்டுள்ளது, இதன் இரண்டவது கேமரா 12MP யின் அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்டுள்ளது மற்றும் மூன்றாவது 12MP  டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. செல்பிக்கு 12MP  கேமரா சென்சார் இருக்கிறது. இதன் பேட்டரி பற்றிய தகவல் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. கனெக்டிவிட்டிக்கு இந்த போனில் 5G ப்ளூடூத்  5.1 GPS WIFI மற்றும் NSFC  போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile