Micromax In 2c அறிமுக தேதி வெளியானது.குறைந்த விலையில் வெளியாகும்.
மைக்ரோமேக்ஸ் அடுத்த வாரம் இந்தியாவில் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான மைக்ரோமேக்ஸை 2சியில் அறிமுகப்படுத்தப் போகிறது
புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C இந்தியாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி அறிமுகமாகிறது
இதனை மைக்ரோமேக்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.
ஹேண்ட்செட் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அடுத்த வாரம் இந்தியாவில் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான மைக்ரோமேக்ஸை 2சியில் அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த வரவிருக்கும் மைக்ரோமேக்ஸ் மொபைல் ஃபோனின் வெளியீட்டு தேதியை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது வெளியீட்டு தேதி தொடர்பான தகவல்களை நிறுவனம் ட்வீட் மூலம் பகிர்ந்துள்ளது.
Surveyஇது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மைக்ரோமேக்ஸ் இன் 2b ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C இந்தியாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி அறிமுகமாகிறது. இதனை மைக்ரோமேக்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைதளமும் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
அதில் புது ஸ்மார்ட்போனின் அம்சங்கள் உள்ளன. அதன்படி புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, டூயல் கேமரா செட்டப், யுனிசாக் T610 பிராசஸர், 5000mAh பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து உள்ளது.
மைக்ரோமேக்ஸ் இன் 2C எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
– 6.52 இன்ச் HD+ 720×1600 பிக்சல் LCD டிஸ்ப்ளே
– யுனிசாக் T610 பிராசஸர்
– 8MP பிரைமரி கேமரா
– VGA இரண்டாவது சென்சார்
– 5MP செல்ஃபி கேமரா
– 4GB / 6GB LPDDR4x ரேம்
– 64GB eMMC 5.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 5000mAh பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்
– ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்.
– யு.எஸ்.பி. சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
