புதிய Mi TV 4X Pro மற்றும் 4A Pro வின் முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு ஆரம்பமாகிறது..!

புதிய Mi TV 4X Pro மற்றும் 4A Pro  வின் முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு ஆரம்பமாகிறது..!
HIGHLIGHTS

Mi TV 4X Pro 55 இன்ச் மற்றும் Mi LED டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடல் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது இந்த டிவியின் விற்பனை பிளிப்கார்ட் MI.காம் மற்றும் மி கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

சியோமி நிறுவனம்  இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மற்றும் Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

Mi TV 4X Pro  55 இன்ச் மற்றும் Mi LED  டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச்  மாடல் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது இந்த டிவியின்  விற்பனை  பிளிப்கார்ட்  MI.காம்  மற்றும் மி கடைகளிலும்  விற்பனைக்கு கிடைக்கிறது. 

சியோமி Mi LED டி.வி. 4X ப்ரோ 55 இன்ச்:

சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலில் 55-இன்ச் 4K UHD HDR 10-பிட், 4840×2160 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த டி.வி.யில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ARM கார்டெக்ஸ் A 53 பிராசஸர் மற்றும் மாலி 450 GPU வழங்கப்பட்டுள்ளது.

அழகிய வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த UI . கொண்டிருக்கும் Mi LED  டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலில் சிறப்பான அனுபவம் கிடைக்கும். மெட்டாலிக் கிரே வடிவமைப்பு கொண்டிருப்பதால் டி.வி. பார்க்க பிரீமியம் தோற்றத்தில் 11 எம்.எம். அளவில் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த டி.வி. ஓ.எஸ். மற்றும் பேட்ச் வால் ஓ.எஸ். கொண்டு இயங்குகிறது. டைனமிக் பேக்கிரவுண்டு மற்றும் ஸ்கிரீன் ஆஃப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்பில்ட் பிளே ஸ்டோர், க்ரோம்காஸ்ட் மற்றும் யூடியூப் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது .

ஆடியோ அனுபவத்தை பொருத்தவைர லாஸ்லெஸ் FLAC ஆடியோ ஃபார்மேட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 பட்டன்களை கொண்ட Mi ரிமோட் மற்றும் ப்ளூடுத், பிரத்யேக வாய்ஸ் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதை கொண்டு டி.வி. மற்றும் செட் டாப் பாக்ஸ்களில் சேனல்களை மாற்றிக் கொள்ளலாம்

சியோமி Mi LED டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச்:

இந்த டி.வி.யில் ஃபிளாக்‌ஷிப் குவாட்-கோர் 64 பிட் அம்லாஜிக் சிப்செட், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. 3 HDMI போர்ட்கள், 3 யு.எஸ்.பி. போர்ட், ஏ/வி, வைபை, ஈத்தர்நெட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சக்திவாய்ந்த 20 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் DTS கோடெக் வசதி கொண்டிருக்கிறது. 55 இன்ச் மாடலை போன்று இந்த டி.வி.யிலும் இன்பில்ட் பிளே ஸ்டோர், க்ரோம்காஸ்ட் மற்றும் யூடியூப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

விலை மற்றும் விற்பனை:

சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலின் விலை இந்தியாவில் ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அறிமுகமான Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடலின் விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ஜனவரி 15 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு இன்று   விற்பனை செய்யப்படுகிறது மேலும் இதை பற்றிய அதுபற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo