இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கெனருடன் அறிமுகமானது Meizu Zero ஸ்மார்ட்போன்..!

HIGHLIGHTS

Meizu நிறுவனம் அதன் Zero என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது, இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கெனரும் வழங்கப்பட்டுள்ளது,

இன்  டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட்  ஸ்கெனருடன்  அறிமுகமானது Meizu Zero ஸ்மார்ட்போன்..!

Meizu  நிறுவனம் அதன் Zero என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது, இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  இன்  டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கெனரும் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த போன் ஒரு அசத்தலான  வடிவமைப்புடன் இருக்கும் வகையில் இந்த புதிய  ஸ்மார்ட்போனில்  3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இத்துடன் USB . டைப்-சி போர்ட் நீக்கப்பட்டு 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய Zero ஸ்மார்ட்போனில் ஆடியோ பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ப்ளூடூத் பயன்படுத்த வேண்டும். வாட்டர்ப்ரூஃப் வடிவமைப்பு கொண்டிருக்கும் Zero ஸ்மார்ட்போன் IP68 சர்ட்பிக்கெட் பெற்றுள்ளது.

Meizu Zero சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 1080×2160 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– ஆண்ட்ராய்டு சார்ந்த ஃபிளைம் 7
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.3″ சோனி IMX380 சென்சார், 1.55μm பிக்சல், f/1.8, OIS, PDAF,
– 20 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், சோனி IMX350 சென்சார், f/2.6, 6-எல்.இ.டி. ரிங் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
– இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் (IP68)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 18வாட் வயர்லெஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போனில் எம்சவுண்ட் 2.0 (mSound 2.0) தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பதால், போனின் ஸ்கிரீன் ஸ்பீக்கர் மற்றும் இயர்பீஸ் போன்று இயங்குகிறது. முந்தைய தொழில்நுட்பங்களை விட மேம்பட்ட ஒலியெழுப்பும் வகையில் மெய்சு சீரோ ஸ்மார்ட்போனின் உள்புறம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக Meizu தெரிவித்துள்ளது.

HDC எட்ஜ் சென்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்ததை போன்ற பிரெஷர் சென்சிட்டிவ் முறையில் இயங்கும்படி பவர் மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. இசிம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பதால் புதிய மெய்சு சீரோ ஸ்மார்ட்போனில் சிம் ஸ்லாட் இடம்பெறவில்லை.

Meizu சீரோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இசிம் தொழில்நுட்பத்திற்கான அனுமதி பெற வேண்டும் என்பதால் புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo